பொழுதுபோக்குத் துறைக்கான தேவைகள் தற்போது அதிகரித்து வருகிறது, குறிப்பாக ஓடிடி இயங்குதளங்கள், இந்த தேவையை பூர்த்தி செய்ய பயனர்கள் தற்போது பயன் தரும் ரீசார்ஜ் திட்டங்களைத் தேடுகின்றனர். ஜியோ தனது போர்ட்ஃபோலியோவின் கீழ் பல தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வருகிறது, இது மலிவான தினசரி டேட்டா திட்டங்கள் முதல் நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் ஓடிடி உடன் வரும் ப்ரீபெய்ட் திட்டங்கள் வரை உள்ளது. அதன்படி இன்று நாங்கள் உங்களுக்கு ஜியோவின் மலிவான திட்டங்களைப் பற்றி கூற உள்ளோம், இது ஒரு வருட வாலிடிட்டி மற்றும் ஓடிடி நன்மைகளுடன் வருகிறது.
ஜியோவின் இரண்டு வருடாந்திர திட்டங்கள்
பட்டியலில் உள்ள முதல் திட்டம் நிறுவனம் வழங்கும் மிகவும் பிரபலமான பேக்குகளில் ஒன்றாகும். இது முழு ஆண்டு கால திட்டம் ரூ.2,999 விலையில் வருகிறது மற்றும் பல நன்மைகளை வழங்குகிறது. ரூ.2,999 திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது மற்றும்ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஜியோவின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். இந்த திட்டத்தை வாங்குவதன் மூலம், புதிய பயனர்கள் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான சந்தாவையும் பெறுவார்கள். இந்த திட்டத்தை வாங்குவதன் மூலம், பயனர்கள் ஓடிடி இயங்குதளமான டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு கூடுதல் கட்டணமின்றி சந்தாவைப் பெறலாம்.
மேலும் படிக்க | Airtel vs Jio: ரூ.300க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டத்தில் யாருடையது சிறந்தது
பட்டியலில் உள்ள இரண்டாவது திட்டம், ஓடிடி இயங்குதளத்திற்கான அணுகலுடன் வரும் ஜியோவின் ஹெவி டேட்டா திட்டமாகும். ரிலையன்ஸ் ஜியோ ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது, இது ரூ. 4,199 விலையில் வருகிறது, மேலும் இது ஒரு வருட செல்லுபடியாகும் திட்டமாகும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் மற்றும் இது அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஜியோவின் ரூ.4,199 திட்டமானது ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் அணுகலுடன் வருகிறது, இதன் விலை ரூ.499 ஆகும். இதில் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல போன்ற ஜியோ பயன்பாடுகளை பயனர்கள் அனுபவிக்க முடியும்.
ஜியோவின் மற்ற திட்டங்கள்
டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு அணுகலை வழங்கும் பல நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ வழங்குகிறது. அத்தகைய ஒரு திட்டமானது, நிறுவனம் வழங்கும் ரூ.1,066 பேக் ஆகும், இது 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதி உள்ளது. ஜியோ ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் ரூ.799 திட்டத்தையும், 56 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவுடன் ரூ.601 திட்டத்தையும் வழங்குகிறது. இந்த பேக்குகள் அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவையும் வழங்குகின்றன.
மறுபுறம், ஏர்டெல் பற்றி பேசுகையில், நிறுவனம் 3359 ரூபாய்க்கான வருடாந்திர திட்டத்தை வழங்குகிறது, அதில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும். அதே நேரத்தில், வோடபோன் ஐடியா தினசரி 2ஜிபி தினசரி டேட்டாவை ரூ.3099க்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 365 தொல்லைக் கொடுக்காத BSNL-ன் சிறந்த ரீச்சார்ஜ் பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR