Flipkart Mobile Bonanza; ரூ.159க்கு Redmi ஸ்மார்ட்போன் வாங்க அறிய வாய்ப்பு

Flipkart நவம்பர் 19 முதல் ஒரு சிறப்பு மொபைல் போனான்சா (Mobile Bonanza) விற்பனையைத் தொடங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2021, 12:46 PM IST
Flipkart Mobile Bonanza; ரூ.159க்கு Redmi ஸ்மார்ட்போன் வாங்க அறிய வாய்ப்பு title=

புதுடெல்லி: நீங்கள் நல்ல மற்றும் குறைந்த விலை ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், சில அற்புதமான சலுகைகளை நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம். ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart நவம்பர் 19 முதல் ஒரு சிறப்பு மொபைல் போனான்ஸாவைத் தொடங்கியுள்ளது, இதில் ஒவ்வொரு சிறந்த பிராண்டின் ஸ்மார்ட்போன்களிலும் உங்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகளில் சிலவற்றைப் பற்றி இங்கே காண்போம். 

159 ரூபாய்க்கு Realme Narzo 50i
சந்தையில் ரூ.9,999 விலையுள்ள Realme Narzo 50i-ஐ Flipkart இலிருந்து ரூ.8,799க்கு வாங்கலாம். நீங்கள் Flipkart இல் Axis வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு கூடுதலாக 5% கேஷ்பேக் கிடைக்கும், அதாவது ரூ.440 வரை தள்ளுபடி. உங்கள் பழைய போனுக்கு ஈடாக இதை வாங்கினால், ரூ.8,200 வரை சேமிக்கலாம், இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த போனின் விலை ரூ.159 மட்டுமே ஆகும்.

ALSO READ: Amazon Sale: வெறும் ரூ.800-க்கு அட்டகாசமான Oppo 5G ஸ்மார்ட்போன் வாங்க சூப்பர் வாய்ப்பு

Samsung Galaxy F22 இல் பெரும் தள்ளுபடி
சாம்சங் (Samsung) வழங்கும் இந்த 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போனை ரூ.16,999 விலையில் ரூ.14,999க்கு வாங்கலாம். மேலும் ரூ.14,250 சேமிக்கும் வகையில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. நீங்கள் Flipkart Axis வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், மேலும் 750 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

Motorola G60 இல் 25% தள்ளுபடி
Motorola G60 ஆனது 108MP பிரதான பின்புற கேமரா மற்றும் 32MP முன்பக்க கேமராவுடன் வருகிறது, இதன் அசல் விலை ரூபாய் 21,999 ஆக இருக்கும் போது நீங்கள் இதை ரூ.16,499க்கு வாங்கலாம். Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம், நீங்கள் ரூ.825 வரை சேமிக்கலாம், உங்கள் பழைய போனுக்கு பதிலாக இந்த போனை வாங்கினால், ரூ.14,250 வரை தள்ளுபடி பெறலாம்.

iPhone 12 ஐ மிகவும் மலிவாக வாங்கலாம்
ஆப்பிள் iPhone 12 இன் 128GB மாறுபாடு ரூ.70,900க்கு பதிலாக ரூ.62,999க்கு வாங்கலாம், மேலும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ரூ.3,150 கூடுதல் தள்ளுபடியைப் பெறுவீர்கள். இந்த டீலில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் ரூ.14,250 வரை சேமிக்கலாம். இந்த வழியில் ஐபோன் 12 ஐ ரூ.45,599க்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

Oppo A53s 5G ஐ ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வாங்கலாம்
Oppo இன் இந்த 5G ஸ்மார்ட்போனின் விலை ரூபாய் 16,990 ஆனால் நீங்கள் இந்த போனை Flipkart இன் மொபைல் போனன்சாவில் 15,990 ரூபாய்க்கு வாங்கலாம். இது மட்டுமின்றி, உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த போனை வாங்கினால், ரூ.14,250 வரை சேமிக்கலாம், மேலும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் மேலும் ரூ.800 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.940க்கு வாங்க முடியும்.

Flipkart இன் மொபைல் போனன்ஸாவில் இதுபோன்ற பல சலுகைகளை நீங்கள் காணலாம். இந்த Flipkart விற்பனையானது நவம்பர் 21 வரை ஆப் மற்றும் இணையதளத்தில் நேரலையில் இருக்கும்.

ALSO READ: Flipkart Sale: வெறும் ரூ. 599-க்கு கிடைக்கிறது அட்டகாசமான Samsung ஸ்மார்ட்போன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News