ரூ.15,000க்குள் ஐபோன் வாங்குங்கள்! Flipkart சிறந்த சலுகை

Flipkart iPhone Offer: 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஆப்பிள் ஐபோனை பிளிப்கார்ட்டில் இருந்து வாங்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்..

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 22, 2022, 03:31 PM IST
  • ரூ.15,000க்குள் ஐபோன் வாங்குங்கள்
  • Flipkart iPhone ஆஃபர்
  • iPhone SEக்கு பெரும் தள்ளுபடி
ரூ.15,000க்குள் ஐபோன் வாங்குங்கள்! Flipkart சிறந்த சலுகை title=

பிளிப்கார்ட் ஐபோன் எஸ்.ஐ சலுகை: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் அதன் பயனர்களுக்கு பல அற்புதமான சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது, இதில் பயனர்களின் விருப்பமான தயாரிப்புகள் பெரும் தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் முதல் வீட்டுப் பொருட்கள் வரை அனைத்தையும் பிளிப்கார்ட்டிலிருந்து மலிவாக வாங்கலாம். அதன்படி இந்த ஒப்பந்தத்தில், 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் ஆப்பிள் ஐபோனை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இந்தச் சலுகை ஐபோன் எஸ்.ஐ இல் வழங்கப்படுகிறது, ஆப்பிள் இன் ஃபிளாக்ஷிப் ஐபோன் அல்ல. அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.. 

ஐபோன் எஸ்.ஐக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது
உங்கள் தகவலுக்கு, நாங்கள் இங்கே ஐபோன் எஸ்.ஐ இன் 64ஜிபி மாறுபாடு பற்றி பேசுகிறோம், இது பிளிப்கார்ட்டில் ரூ.39,900 விலையில் விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் 23% தள்ளுபடிக்கு பிறகு ரூ.30,499க்கு வாங்கலாம். இதுமட்டுமின்றி, இந்த டீலில் கூடுதல் சலுகையும் வழங்கப்படுகிறது, இதன் மூலம் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த ஸ்மார்ட்போனை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 

மேலும் படிக்க | அலர்ட்! மறந்து கூட இந்த இடங்களில் இருந்து ஐபோன் வாங்காதீர்கள்

ரூ.15,000க்குள் ஐபோன் வாங்குங்கள்!
15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ-யை எப்படி வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். இதில் கூடுதல் தள்ளுபடிக்குப் பிறகு, ரூ.39,900 ஐபோன் ரூ.30,499 க்கு விற்கப்படுகிறது, மேலும் இந்த போனை பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக வாங்கினால், மேலும் ரூ.17 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெறும்போது, ​​இந்த போனின் விலை உங்களுக்கு ரூ.13,499 ஆக இருக்கும், இதன் மூலம் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஆப்பிள் ஸ்மார்ட்போனை வாங்க முடியும். 

ஐபோன் எஸ்இ இன் அம்சங்கள் 
ஐபோன் எஸ்இயின் 64ஜிபி வேரியண்டில் 4.7 இன்ச் ரெடினா எச்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. ஏ13 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் இந்த ஐபோனில் 12எம்பி பின்புற கேமரா மற்றும் 7எம்பி முன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த 4ஜி போன் டூயல் சிம் வசதியுடன் வருகிறது, இதன் ஸ்டோரேஜை அதிகரிக்க முடியாது மற்றும் ஆடியோ ஜாக்கும் வழங்கப்படவில்லை. விரைவான சார்ஜிங் அம்சத்துடன் ஐபோன் எஸ்இ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | OPPO K10 5G -க்கு மெகா தள்ளுபடி: பிளிப்கார்ட்டில் முந்துங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News