அசத்தும் பிஎஸ்என்எல்: வெறும் ரூ.49-ல் சூப்பர் ரீசார்ஜ் பிளான், பயனர்கள் ஹேப்பி!!

BSNL Recharge Plan: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கொடுக்கத் தயங்கும் மிக மலிவான ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அளிப்பது குறிப்பிடத்தக்கது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 2, 2023, 12:33 PM IST
  • பிஎஸ்என்எல்: ரூ. 49 ரீசார்ஜ் திட்டம்.
  • ரூ. 49 ரீசார்ஜ் திட்டம் அளிக்கும் வேலிடிட்டி என்ன?
  • இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன?
அசத்தும் பிஎஸ்என்எல்: வெறும் ரூ.49-ல் சூப்பர் ரீசார்ஜ் பிளான், பயனர்கள் ஹேப்பி!! title=

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள்: இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. பிஎஸ்என்எல்-ன் திட்டங்கள் மலிவு விலையில் பல நல்ல அம்சங்களையும், வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன. பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் அதிகரித்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் அவற்றுக்கு ஈடாக பல ரீசார்ஜ் திட்டங்களை அடுத்தடுத்து அளித்து வருகின்றது.

பிஎஸ்என்எல் சாமானியர்களுக்கு ஏற்ற பல மலிவு விலை திட்டங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் கிராமப்புறங்களில் இந்த திட்டங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கின்றது. யாரும் அளிக்க முடியாத மிக மலிவான ஒரு திட்டத்தை பிஎஸ்என்எல் சென்னை பயனர்களுக்கு வழங்குகிறது. மிகக்குறைந்த விலையில், பல வித நன்மைகளை அளிக்கும் அந்த பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம். 

பிஎஸ்என்எல்: ரூ. 49 ரீசார்ஜ் திட்டம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 49-க்கான ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றது. பிஎஸ்என்எல்-ன் இந்த 49 ரீசார்ஜ் திட்டத்தில் 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை மிக குறைவாக இருப்பதால், இதன் செல்லுபடி காலம் மிக குறைவாக இருக்கும் என்ற அச்சம் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். ஆனால், அச்சம் தேவை இல்லை. 

மேலும் படிக்க | ரூ 269 ரீசார்ஜ் பிளான்..தினமும் 2 ஜிபி டேட்டா..அள்ளி வீசும் பிஎஸ்என்எல் 

பிஎஸ்என்எல் ரூ. 49 ரீசார்ஜ் திட்டம்: வேலிடிட்டி என்ன?

பிஎஸ்என்எல் ரூ. 49 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அதிசயிக்கும் வகையில் 15 நாட்களுக்கான வேலிடிட்டி, அதாவது செல்லுபடி காலம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு குறைந்த விலையில், இவ்வளவு நாட்களுக்கான வேலிடிட்டி கிடைப்பது மிக அரிது என்பது குறிப்பிடத்தக்கது. பயனர்கள் இந்த ரீசார்ஜ் பிளானை தேர்ந்தெடுக்க இந்த அம்சம் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.

பிஎஸ்என்எல் ரூ. 49 ரீசார்ஜ் திட்டம்: இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன?

பிஎஸ்என்எல் ரூ. 49 ரீசார்ஜ் திட்டத்தில் 15 நாட்களுக்கான வேலிடிட்டியுடன் 100 நிமிடங்களுக்கான லோக்கல் மற்றும் நேஷனல் குரல் அழைப்புகள், அதாவது வாய்ஸ் கால்களை செய்யலாம். இதனுடன் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 1 ஜிபி தரவும் கிடைக்கிறது. அழைப்புகளை மேற்கொள்ளவும், குறிப்பிட்ட அளவில் இணையத்தை பயன்படுத்தவும் மட்டும் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்களுக்கு இது ஏற்ற திட்டமாக இருக்கும்.

பிஎஸ்என்எல், அதாவது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட் நிறுவனம் பல வித மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்கிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கொடுக்கத் தயங்கும் மிக மலிவான ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அளிப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ரூ 666 ரீசார்ஜ் பிளான்..ஆஃபரை அள்ளிக்கொட்டிய பிஎஸ்என்எல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News