பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ப்ரீப்பெய்ட் பிளான்கள், வாடிக்கையாளர்களை அசரடிகின்றன. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ஐடியா நிறுவனங்கள் புதிய புதிய ஆஃபர்களையும், சலுகைகளையும் அறிவிக்கும் நிலையில், அந்த நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனமும் அட்டகாசமான திட்டங்களை அறிவித்து வருகிறது. இலவசங்களை அள்ளி வழங்கும் ஜியோ நிறுவனத்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் புதிய ப்ரீப்பெய்ட் திட்டம் ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் கொண்டுவந்துள்ள புதிய ப்ரீப்பெய்ட் திட்டத்தை 22 ரூபாய் பிளானை ரீச்சார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
பிஎஸ்என்எல் ரூ.22 ப்ரீபெய்ட் திட்டம்
BSNL நிறுவனத்தின் ரூ.22 ப்ரீபெய்ட் திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்தில் இலவச அழைப்பு மற்றும் இலவச டேட்டா கிடைக்காது. உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா பிடித்தம் செய்யப்படும். மலிவான விலையில் ப்ரீப்பெய்ட் பிளான் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் சரியாக இருக்கும்.
மேலும் படிக்க | போன் தொலைந்துவிட்டால் GPay, PhonePe மற்றும் Paytm -ஐ பிளாக் செய்வது எப்படி?
ஏர்டெல் ரூ.19 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் ஏர்டெல் நிறுவனம், யூசர்களுக்கு ரூ.19 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், 1 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். விலை குறைவாக இருக்கிறது என நினைத்தால், வேலிடிட்டி வாடிக்கையாளர்களுக்கு செட் ஆகாது. ஏனென்றால் இந்த பிளானின் வேலிடிட்டி ஒரே ஒருநாள் மட்டுமே.
ஜியோவின் ரூ.25 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவில் இருக்கும் ரூ.25 ப்ரீபெய்ட் திட்டத்தில் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவை நீங்கள் உபயோகப்படுத்திவிட்டீர்கள் என்றால், உங்களின் இணைய வேகம் குறைந்துவிடும். வேலிடிட்டியைப் பொறுத்தவரை, ஏற்கனவே உங்களிடம் இருக்கும் பிளானின் வேலிடிட்டி முடிவடையும்போது, இந்த திட்டமும் முடிவுக்கு வரும்.
வோடபோன் ஐடியா ரூ 19 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல்லைப் போலவே, வோடபோன் ஐடியாவும் யூசர்களுக்கு 19 ரூபாய்க்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டிருக்கிறது. இதில் 1ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால் இந்த பிளானின் வேலிடிட்டி ஒரே ஒருநாள் மட்டுமே. சிறப்பம்சம் என்னவென்றால், வோடபோன் செயலி மூலம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் நீங்கள் பார்க்கலாம்.
மேலும் படிக்க | iPhone Tips: பயன்படாத செயலிகளை ஐபோனில் நீக்க சூப்பர் டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ