மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ரூ.499-க்கான பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு புதிய திட்டம். அதாவது, வேறு ஒரு பெயரில் வழங்கிய திட்டத்தை, பெயரை மற்றும் மாற்றி புதியதுபோல் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
BSNL-ன் ரூ.499 திட்டம்
BSNL-ன் ரூ.499 திட்டமானது 40 Mbps இணைய வேகத்துடன் 3.3TB வரை FUP டேட்டாவுடன், அன்லிமிட்டெட் குரல் அழைப்பை வழங்குகிறது. FUP தரவு வரம்பை அடைந்ததும், வேகத்தை 4 Mbps வரை குறைக்கலாம். பயனர்களுக்கு முதல் மாதத்திற்கு ரூ.500 வரை 90% வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | இதை மட்டும் செய்தால் யூடியூப் அப்டேட்டுகளை முன்னரே தெரிஞ்சுக்கலாம்...!
NEO பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்
BSNL-ன் ரூ.449 ஃபைபர் அடிப்படை நியோ பிராட்பேண்ட் திட்டத்தில், பயனர்களுக்கு 30 Mbps இணைய வேகம் மாதாந்திர FUP டேட்டாவுடன் 3.3TB வரை வழங்கப்படுகிறது. FUP தரவு வரம்பை அடைந்த பிறகு, வேகம் 4 Mbps ஆக குறைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் முதல் மாத பில்லில் 90% (ரூ. 500 வரை) தள்ளுபடியும் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.775 மற்றும் ரூ.275 பிராட்பேண்ட் திட்டங்களை விரைவில் நிறுத்தப் போகிறது. இந்த இரண்டு திட்டங்களும் 75வது சுதந்திர தினத்தின் போது விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ