ரூ. 7 ஆயிரத்திற்கும் குறைவாக 'நச்' மொபைல்கள்... தள்ளுபடி காலத்திலேயே அள்ளிக்கோங்க!

Best Smartphone Discount: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் ரூ. 7 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கும் சிறந்த மூன்று மொபைல்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 11, 2023, 09:40 AM IST
  • அமேசானின் இந்த தள்ளுபடி கடந்த 8ஆம் தேதி தொடங்கியது.
  • பல்வேறு மின்னணு சாதனங்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன.
  • வரும் அக். 15ஆம் தேதியுடன் விற்பனை முடிவடைகிறது.
ரூ. 7 ஆயிரத்திற்கும் குறைவாக 'நச்' மொபைல்கள்... தள்ளுபடி காலத்திலேயே அள்ளிக்கோங்க! title=

Best Smartphone Discount: பண்டிகை காலம் என்றாலே தள்ளுபடிகளிலும், அதிரடி விற்பனைகளும் நமக்கு பழக்கப்பட்டதுதான் என்றாலும், இன்றைய காலகட்டத்தில் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இணையதளங்கள் வழங்கும் தள்ளுபடிகள்தான் அனைவராலும எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. 

இப்போது ஊரெல்லாம் அமேசான் குறித்த பேச்சாகதான் இருக்கும், ஏனென்றால், அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் எனும் தள்ளுபடி விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது, மேலும் இது பல்வேறு வகைகளில் பல்வேறு தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.

இதில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டேப்லட்கள் போன்ற பல மின்னணு சாதனங்களும் அடங்கும். குறிப்பாக, இதில் சுவாரஸ்யமான தள்ளுபடி என்றால் 7 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் உள்ள சில ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்கள்தான். அமேசானின் இந்த விற்பனையில் முன் எப்போதும் இல்லாத விலையில் ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், நீங்கள் அமேசானின் இந்த விற்பனையின் மூலம் இதுபோன்ற ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டால், 7 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் உள்ள சிறந்த மூன்று மொபைல்களை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | வெரி சிம்பிள்! ஜஸ்ட் 4 ஸ்டெப்ஸ்.. வாட்ஸ்அப்பில் சேனலின் பெயரை எவ்வாறு எடிட் செய்வது

Samsung Galaxy M04

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் Samsung Galaxy M04 மொபைல் 46 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இதில், 4GB RAM மற்றும் 64GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ள மாடலின் விலை இப்போது 6 ஆயிரத்து 499 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு உட்பட்ட சாம்சங்கின் புதிய போன் இதுவாகும்.

பட்ஜெட் ஸ்மார்ட்போனான இதில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 60Hz தெளிவுத்திறனுடன் (Resolution) உடன் வருகிறது. இது 13MP இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் 5MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இது MediaTek Helio P35 சிப்செட் மூலம் 4GB வரை ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது. இது நிலையான சார்ஜிங் வேகத்துடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Redmi A2 

அமேசானில் கிடைக்கும் 7 ஆயிர ரூபாய்க்கும் குறைவான பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்று, Redmi A2. இதில் 2GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 6 ஆயிரத்து 199 ரூபாயாகும். மேலும், 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 6 ஆயிரத்து 799 ரூபாயாகும். அதிக RAM இருப்பதால், இரண்டாவது வேரியண்ட்டைப் பெறவே பலரும் பரிந்துரைக்கின்றனர். Redmi தயாரிப்புடன் 2 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது. 

இந்த மொபைல் 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் இரட்டை பின்புற கேமராக்களுடன் வருகிறது. இது MediaTek Helio G36 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 Go OS மூலம் செயல்படுகிறது.

Tecno POP 7 Pro

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் 3GB RAM + 64GB இன்டர்நெல் ஸ்ரோடேஜ் வேரியண்ட் Tecno POP 7 Pro மொபைல் 6 ஆயிரத்து 299 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது 2GB RAM + 64GB இன்டர்நெல் ஸ்ரோடேஜ் மாறுபாட்டின் விலையை விட மலிவானது.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் HD+ ரெசல்யூஷனுடன் வருகிறது. திரையானது 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் 120Hz தொடு மாதிரி வீதத்தைக் கொண்டுள்ளது. இது MediaTek Helio A22 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது. கடைசியாக, இது ஆண்ட்ராய்டு 12 OS-இல் HiOS 12 உடன் இயங்குகிறது.

மேலும் படிக்க | ஆப்பிள் ஐபோனுக்கு வந்த திடீர் எச்சரிக்கை மெசேஜ்... குழப்பத்தில் மக்கள் - என்ன விஷயம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News