சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப கட்டண உயர்வை நோக்கி செல்ல வேண்டும்: சுனில் மிட்டல்

கட்டணத்தைப் பொருத்தவரை, ஏர்டெல் நீண்ட காலமாக உயர்த்தாமல் இருக்கிறது. இப்போது விலைகளை அதிகரிக்க வேண்டிய நேரம் இது என்று ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டல் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2020, 06:14 PM IST
  • கட்டணத்தைப் பொருத்தவரை, ஏர்டெல் நீண்ட காலமாக உயர்த்தாமல் இருக்கிறது.
  • தற்போதைய கட்டணத்தை தொடர்ந்து வைத்திருப்பது கடினம்.
  • விலை உயர்வு எதிர்காலத்தில் தொலைத் தொடர்புத் துறையின் வலிமையைத் தீர்மானிக்கும்.
  • இப்போது விலைகளை அதிகரிக்க வேண்டிய நேரம் இது: சுனில் மிட்டல்.
சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப கட்டண உயர்வை நோக்கி செல்ல வேண்டும்: சுனில் மிட்டல் title=

புது டெல்லி: தற்போதைய விலை விகிதத்தில் தொடர்ந்து செயல்படுவது கடினம் என்று நாட்டின் முக்கியத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப கட்டண உயர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். கட்டணத்தைப் பொருத்தவரை, ஏர்டெல் நீண்ட காலமாக உயர்த்தாமல் இருக்கிறது. இப்போது விலைகளை அதிகரிக்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

5 ஜி நெட்வொர்க்கில் (5G Network) சீன நிறுவனங்களுக்கு நுழைவு வழங்கப்பட வேண்டுமா, இல்லையா என்று கேட்டதற்கு, இது ஒரு முக்கிய முடிவு என்றும், நமது அரசு எந்த முடிவை எடுத்தாலும் அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் சுனில் மிட்டல் (Sunil Mittal) கூறினார். 

செய்தி நிறுவனமான பி.டி.ஐ-க்கு அளித்த பேட்டியில் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கூறியது, "ஒரு காலத்திற்குப் பிறகு கட்டண உயர்வு தேவை என்றும், தற்போதைய கட்டணத்தை தொடர்ந்து வைத்திருப்பது கடினம் என்று அவர் கூறினார். சந்தை நிலைமைகளை மதிப்பிட்ட பிறகு, விலை உயர்த்துவது பற்றி கருத்தில் கொள்ளவேண்டும். இந்த விலை உயர்வு எதிர்காலத்தில் தொலைத் தொடர்புத் துறையின் வலிமையைத் தீர்மானிக்கும் என்று அவர் கூறினார். 

ALSO READ | Airtel இன் மிகவும் பிரபலமான திட்டங்கள் தொடர்பாக ஒரு பார்வை!

தொலைத் தொடர்புத்துறை என்பது ஒரு பெரிய முதலீடு மற்றும் மூலதனம் செலவிடப்படும் துறை என்று, மேலும் வரி அதிகமாக இருப்பது குறித்து கவலையை எழுப்பினார் சுனில் மிட்டல். நெட்வொர்க், ஸ்பெக்ட்ரம் (Spectrum) , கோபுரங்கள் மற்றும் தொழில்நுட்பம் (Technology) உள்ளிட்ட பல விஷயங்களை தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்று சுனில் மிட்டல் சுட்டிக்காட்டினார். 

தொழில் நிலையான வளர்ச்சியை அடையக்கூடிய விலை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். மின் உற்பத்தி நிலையங்கள், எஃகு ஆலைகள் அல்லது சுத்திகரிப்பு நிலையங்களைப் போலவே தொலைத் தொடர்புத் துறையிலும் நிலையான முதலீடு தேவை என்று அவர் கூறினார். இதுவும் ஒரு முக்கியத்துறையாகும், இதில் ஒவ்வொரு ஆண்டும் புதிய தொழில்நுட்பத்திற்காக பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட வேண்டும் என்று சுனில் மிட்டல் கூறினார்.

ஒரு மாதத்தில் 160 ரூபாய்க்கு 16 ஜிபி டேட்டா கொடுப்பது கடினம் என்றும், அதை ரூ .200 அல்லது 300 ஆக அதிகரிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்திருந்தேன்.

ALSO READ | Jio, Airtel மற்றும் Vodafone-idea இன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள், முழு பட்டியலையும் இங்கே காண்க

இந்த ஆண்டின் செப்டம்பர் காலாண்டில், ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பயனரின் சராசரி வருவாய் ரூ .162 ஆகவும், ஜூன் மாதத்தில் இது ரூ .157 ஆகவும் இருந்தது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News