ரூ.15000க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான மொபைல்கள்!

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அதிக அம்சங்களை கொண்ட மொபைல்கள் ரூ.15000க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 25, 2022, 04:13 PM IST
ரூ.15000க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான மொபைல்கள்! title=

இந்திய சந்தையில் ரூ.15000-க்கும் குறைவான விலையில் அசத்தலான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் உள்ளது.  இந்த வகை ஸ்மார்ட்போன்களில் ரேம், டிஸ்பிளே, கேமரா அனைத்தும் நல்லவித தரத்தில் கிடைக்கிறது.  50 முதல் 64 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் இந்த வகை ஸ்மார்ட்போன்கள் குறைவான விலையில் மக்களை சென்றடைய இருக்கிறது.  ரூ.15000-த்திற்கும் குறைவான விலையில் நல்ல ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த மாதமாகும்.

மேலும் படிக்க | TikTok-ஐ மிஸ் செய்யும் பயனர்களுக்கு Facebook அளித்த பரிசு: புதிய அம்சம் அறிமுகம்

மோட்டோரோலா ஜி3 1 :

மோட்டோரோலா ஜி3 1 ஆனது 6.4இன்ச் ஹெச்டி மற்றும் அமோல்ட் ஸ்க்ரீன் கொண்டுள்ளது.  இந்த வகை ஸ்மார்ட்போனில் 8 எம்பி அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் பின்புறத்தில் 50 எம்பி கேமராவை கொண்டுள்ளது.  மொபைலின் முன்புறம் மேற்பகுதியில் 13 எம்பி கேமரா உள்ளது, இதன்மூலம் சிறந்த முறையில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்பு வசதியும் சிறப்பாக அமையும்.  மோட்டோ 3ஜி ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.  இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.  மேலும் இது 5000எம்எஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 க்கு விற்கப்படுகிறது.

moto

ரியல்மி நார்சோ 30 :

ரியல்மி நார்சோ 30 வகை ஸ்மார்ட்போனானது 6 இன்ச் முழு ஹெச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது.  இந்த போனின் முன்புறத்தில் மேல்பகுதியில் உள்ள செல்பி கேமரா 16 எம்பி கொண்டுள்ளது.  இந்தவகை ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப் உதவியுடன் இயங்குகிறது.  இந்த போன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.  இதன் முதன்மை கேமரா 48எம்பி மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் கிடைக்கிறது.  மேலும் இது 5000எம்எஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,499 க்கு விற்கப்படுகிறது.

realme

ரெட்மி 10 ப்ரைம் :

சியோமி போன்களில் ரெட்மி 10 ப்ரைம் ஒரு சிறந்த போனாகும்.  இது 6.5 இன்ச் முழு ஹெச்டி டிஸ்பிளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்புடன் வருகிறது.  இதன் திரை சிறந்த முறையில் அமைக்கப்பட்டிருப்பதால் இவற்றில் கீறல்கள் ஏதும் விழாத வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.  மேலும் இந்த போன்  மீடியாடெக் ஹீலியோ ஜி 88 எஸ்ஓசி மூலம் இயங்குகிறது.  இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.  இதில் 50 எம்பி முதன்மை கேமராவுடன் நான்கு கேமராக்கள் கொண்டுள்ளது, 8 எம்பி அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் 2 எம்பி டெப்த் சென்சார் கொண்டுள்ளது.  மேலும் இது 6000எம்எஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,499 க்கு விற்கப்படுகிறது.

redmi

ரெட்மி நோட் 10எஸ் :

ரெட்மி நோட் 10எஸ் ஆனது சிறப்பான அம்ஸங்களை கொண்டுள்ளது.  இந்த போன் 6.43 இன்ச் முழு ஹெச்டி டிஸ்பிளே மற்றும் அமோல்ட் டிஸ்பி கொண்டுள்ளது.  இது 3 அடுக்கு கொரில்லா க்ளாஸ் உடன்  வருவதால் உடனடியாக கீறல்கள் விழாமல் பாதுகாக்கப்படுகிறது.  இந்தவகை ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப் உதவியுடன் இயங்குகிறது.   இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.  64 எம்பி கேமராவுடன் குவடகேமராக்களை கொண்டுள்ளது.    8 எம்பி அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் 2 எம்பி டெப்த் சென்சார் கொண்டுள்ளது.  மேலும் இது 5000எம்எஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,499 க்கு விற்கப்படுகிறது.

10s

மேலும் படிக்க | உஷார் மக்களே! வங்கிக் கணக்கை காலி செய்யும் மோசமான செயலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News