Battlegrounds கேம் நீக்கம் பின்னணியில் மத்திய அரசு! திடீர் நடவடிக்கை காரணம் என்ன?

பப்ஜி தடை செய்யப்பட்ட பிறகு பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா ( Battlegrounds Mobile India ) என்ற பெயரில் மீண்டும் இந்திய கேமிங் சந்தையில் களமிறங்கியது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 29, 2022, 03:31 PM IST
  • பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா
  • கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் நீக்கம்
  • பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக தகவல்
Battlegrounds கேம் நீக்கம் பின்னணியில் மத்திய அரசு! திடீர் நடவடிக்கை காரணம் என்ன?  title=

இந்தியாவில் கேமிங் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. பப்ஜி தடைக்குப் பிறகு அதேபோன்றதொரு கேம்-ஐ தொடர்ந்து விளையாட மாணவர்களும், கேம் பிரியர்களும் ஆர்வமாக இருந்தனர். சிலர் குறுக்கு வழிகளைகூட பயன்படுத்தி பப்ஜி கேமை விளையாடத் தொடங்கினர். அந்தளவுக்கு ஈர்ப்பை பெற்றிருக்கும் பப்ஜியை இந்தியாவில் களமிறக்க கிராப்டன் நிறுவனம் முயற்சி செய்தது. ஆனால், மத்திய அரசு இசைவு கொடுக்க மறுத்ததால், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கொள்கைகளுக்கு ஏற்ப Battlegrounds Mobile India (BGMI) என்ற பெயரில் பிரத்யேகமாக கேமை உருவாக்கி அறிமுகப்படுத்தியது கிராப்டன் நிறுவனம்.

மேலும் படிக்க | Second Hand Car வாங்கணுமா? இங்க ஈசியா கடன் கிடைக்கும்

நாளுக்கு நாள் மாணவர்கள் மற்றும் கேம் பிரியர்களிடையே ஏகோபித்த ஆதரவைப் பெற்ற இந்த கேம், இப்போது நம்பர் 1 அந்தஸ்தையும் பெற்றுள்ளது. மில்லியன் கணக்கான யூசர்கள் இந்த கேமை நாள்தோறும் விளையாடி வருகின்றனர். ஆனால், திடீரென Battlegrounds Mobile India கேம் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த கேம் நீக்கப்பட்டது, கேம் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னணி குறித்து மத்திய அரசு மற்றும் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் ஆகியவை அதிகாரப்பூர்மான விளக்கங்களை கொடுக்கவில்லை. மத்திய அரசின் விதிகளை மீறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பிளே ஸ்டோர்களில் இருந்து Battlegrounds Mobile India-வை நீக்க மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கும். அதன்பேரில் கூகுள் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்கள், இந்த கேமை நீக்க நடவடிக்கை எடுத்திருக்கும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அப்டேட் Battlegrounds Mobile India கிடைக்காது. ஒருவேளை அவர்கள் அப்டேட் செய்தால், அவர்களின் கடைசி வெர்சன் கேமும் விளையாடமுடியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. 

மாணவர்களின் மத்தியில் Battlegrounds Mobile India மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், உளவியல் ரீதியாக அவர்கள் பெரிய பிரச்சனைகளை சந்திப்பதாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் இந்த கேமை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டது பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | போன் தொலைந்துவிட்டால் GPay, PhonePe மற்றும் Paytm -ஐ பிளாக் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News