புதிய பஜாஜ் சேடக் EV இப்போது 20 நகரங்களில் கிடைக்கிறது

பஜாஜ் சேடக் மின்சார ஸ்கூட்டர் இப்போது புது டெல்லி, மும்பை மற்றும் 18 இந்திய நகரங்களில் கிடைக்கிறது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 18, 2022, 06:54 AM IST
  • புதிய பஜாஜ் சேடக் EV இப்போது 20 நகரங்களில்
  • கூடுதலாக 12 நகரங்களில் சேடக்கிற்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன
  • பதிவு செய்தவர்களுக்கு 4 முதல் 8 வாரத்திற்குள் ஸ்கூட்டர்கள் கிடைக்கும்
புதிய பஜாஜ் சேடக் EV இப்போது 20 நகரங்களில் கிடைக்கிறது title=

புதுடெல்லி: 2021 ஆம் ஆண்டில், பஜாஜ் ஆட்டோ 8 நகரங்களில் Chetak EVக்கான முன்பதிவுகளைத் திறந்தது. 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு வாரங்களில், கூடுதலாக 12 நகரங்களில் சேடக்கிற்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன.

பஜாஜ் சேடக் மின்சார ஸ்கூட்டர் இப்போது மூன்று புதிய முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பஜாஜ் ஆட்டோ இப்போது புது டெல்லி, மும்பை கோவாவில் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது.

அறிமுகப்படுத்திய ஆறு வாரங்களில், மின்சார ஸ்கூட்டரை விநியோகம் செய்யும் நகரங்களின் ஒட்டுமொத்த நெட்வொர்க்கை இரட்டிப்பாக்க முடிந்தது. 

2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு வாரங்களில் 12 கூடுதல் நகரங்களை எட்டுவதற்கான மைல்கல்லை எட்டியுள்ளதாக பஜாஜ் ஆட்டோ கூறுகிறது. இந்த புதிய நகரங்களில் பஜாஜ் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் உறுதி செய்துள்ளது. 

பதிவு செய்தவர்களுக்கு 4 முதல் 8 வாரத்திற்குள் ஸ்கூட்டர்கள் கிடைக்கும். www.chetak.com இல் வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்.  

மேலும் படிக்க | ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ செல்லும் பைக்! விரைவில்

நகரங்களின் பட்டியல்
2021 ஆம் ஆண்டில், பஜாஜ் ஆட்டோ 8 நகரங்களில் Chetak EVக்கான முன்பதிவுகளைத் திறந்தது. 2022 இன் முதல் ஆறு வாரங்களில், சேடக்கிற்கான முன்பதிவுகள் கூடுதலாக 12 நகரங்களில் திறக்கப்பட்டுள்ளன. 

இப்போது பஜாஜின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும் நகரங்களின் பட்டியலில் கோயம்புத்தூர், மதுரை, கொச்சி, கோழிக்கோடு, ஹூப்ளி, விசாகப்பட்டினம், நாசிக், வசாய், சூரத், டெல்லி, மும்பை மற்றும் மபுசா ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான மிகப்பெரிய சந்தைகளில் டெல்லியும் மும்பையும் ஒன்றாகும். பஜாஜ் ஆட்டோ தனது மின்சார வாகன உற்பத்தி திறனை அதிகரிக்க ₹ 300 கோடி முதலீட்டை சமீபத்தில் அறிவித்தது. 

புனேவில் புதிய ஆலை
டிசம்பரின் பிற்பகுதியில், பஜாஜ் ஆட்டோ புனேவில் ஒரு புதிய மின்சார வாகன ஆலையை திறப்பதாக அறிவித்தது. இந்த உற்பத்தி ஆலையில் (manufacturing electric vehicles) ரூ.300 கோடி (40 மில்லியன் டாலர்) முதலீடு செய்ய நிறுவனம் முடிவு செய்தது. 

ஆட்டோமோட்டிவ் பிராண்ட் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்காக அகுர்டியில் அமைந்துள்ள புதிய ஆலை உற்பத்தியைத் தொடங்கியது.

மேலும் படிக்க | Huracan EVO ஃப்ளூ காப்ஸ்யூல் முதல் ஸ்போர்ட்ஸ் கார் சென்னையில் டெலிவரி

ஆண்டுக்கு 5,00,000 மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இந்த ஆலை. அகுர்டி (புனே) அசல் சேடக் ஸ்கூட்டர் தொழிற்சாலையின் தளமாகும். புது தில்லி மற்றும் மும்பை போன்ற பெரிய சந்தைகளிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துவது, புதிய உற்பத்தி ஆலையால் தான் சாத்தியமானது. 

இது குறித்து பேசிய பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா, “முழுமையாக சோதிக்கப்பட்ட, நம்பகமான தயாரிப்பின் தரத்தில் சேடக்கின் வெற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. விற்பனை மற்றும் சேவையின் அடிப்படை வலையமைப்பு, மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற அறிமுகமில்லாத வகைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களின் கவலையைக் குறைக்கிறது. வரும் சில வாரங்களில் அதிக தேவைக்கு ஏற்ப சேடக்கின் நெட்வொர்க்கை இரட்டிப்பாக்குவது எங்கள் திட்டம்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | கன்னாபின்னாவென விற்கும் எலக்ட்ரிக் வாகனங்கள்: மிரள வைக்கும் வளர்ச்சி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News