ஆப்பிள் நிறுவனத்தின் 2017 புதிய ஐபோன் 8 செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகும் என் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் உறுதி செய்துள்ளது.
முன்னதாக ஐபோன் 8, ஐபோன் 7S, ஐபோன் 7S பிளஸ் மற்றும் சிம் கார்டு வசதி கொண்ட ஆப்பிள் வாட்ச் செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியிருந்தது.
இதுகுறித்து வால் ஜர்னல் வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய ஐபோன் 8 செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஐபோன் 8 புதிய வடிவமைப்பு, இரண்டு அடுக்கு கிளாஸ் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஐபோன் 8 சார்ந்து இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் 5.8 இன்ச் OLED பேனல் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதேபோன்ற திரை சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டது.
புதிய ஐபோன் திரை அளவு தெளிவாக அறியப்படாத நிலையில், இவை திரையை சுற்றி நிச்சயம் மெல்லிய பெசல் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஐபோன் 8-ல் வழக்கமான ஹோம் பட்டன் நீக்கப்படும் என்றும், டச் ஐடி சார்ந்து இருவித தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒன்றில் புதிய டச் ஐடி ஐபோனின் பின்புறம் இருக்கும் ஆப்பிள் லோகோவில் வழங்கப்படலாம் என்றும், மற்றொரு தகவலில் முன்பக்கம் இருக்கும் கிளாஸ்-இன் கீழ் பொறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.