அடுத்த 5 ஆண்டுகளில் அமேசான் 10 லட்சம் வேலைகளை வழங்க உள்ளது.

அமேசான் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 1 மில்லியன் வேலைகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் மின்சார ரிக்‌ஷாக்கள் அறிமுகப்படுத்த உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2020, 07:17 PM IST
அடுத்த 5 ஆண்டுகளில் அமேசான் 10 லட்சம் வேலைகளை வழங்க உள்ளது. title=

புதுடெல்லி: மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 1 மில்லியன் வேலைகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், விநியோகத்தை எளிதாக்குவதற்காக, அமேசான் இ-ரிக்‌ஷாக்களை இந்தியாவுக்குக் கொண்டுவரப் போகிறது. இவை அனைத்தும் முழுமையாக மின்சாரத்தால் இயங்கக்கூடியதாக இருக்கும்.

ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்வதன் மூலம் பெசோஸ் அவர்களே இந்த தகவலைக் கொடுத்தார். வீடியோவில், பெசோஸ் தனது மற்ற சகாக்களுடன் ஒரு இ-ரிக்‌ஷாவை ஓட்டுவதைக் காணலாம். 

அந்த ட்வீட்டில், நாங்கள் புதிய மின்சார விநியோக ரிக்‌ஷாக்களை இந்தியாவில் தொடங்குகிறோம். இது முழு மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. முற்றிலும் பூஜ்ஜிய கார்பன். மேலும் பெசோஸ் க்ளைமேட் பிளெட்ஜ் (#ClimatePledge) என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார். 

 

பெசோஸ் மூன்று நாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அவர் இந்தியாவில் சிறு வணிகத்திற்காக 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப் போவதாகக் கூறியுள்ளார். இதற்கு முன்பு, அமேசான் நிறுவனம் இந்தியாவில் 5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. அமேசான் (Amazon) இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 1 மில்லியன் வேலைகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 

இந்திய இ-காமர்ஸ் சந்தையில் அமசான் ஒரு முன்னணி நிறுவனம். அமேசானின் திருவிழா விற்பனை இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது,

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News