Jio இன் அசத்தல் திட்டம்: குறைந்த விலையில் 28 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா

Reliance Jio ஒரு நாளைக்கு 3GB ஒரு நாளைக்கு 3GB திட்டங்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2021, 08:56 AM IST
Jio இன் அசத்தல் திட்டம்: குறைந்த விலையில் 28 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா title=

புதுடெல்லி: Reliance Jio தனது திட்டங்களின் விலையை சில வாரங்களுக்கு முன்பு உயர்த்தியுள்ளது. ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. குறைந்த விலை முதல் அதிக விலை திட்டங்களை இதில் வைத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் மக்கள் மொபைலில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். இத்தகைய சூழலில், அதிக தரவு பயன்படுத்தப்படுகிறது. அதன்படி Reliance Jio ஒரு நாளைக்கு 3GB ஒரு நாளைக்கு 3GB திட்டங்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம்.

ரிலையன்ஸ் ஜியோவின் (Jio) ரூ.601 திட்டம்: Reliance Jio 28 நாட்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டுள்ளது. ஜியோவின் ரூ.601 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது, இதில் பயனருக்கு ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, திட்டத்தில் (Prepaid Plans) கூடுதலாக 6 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதாவது மொத்தம் 90ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, திட்டத்துடன் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். Disney+ Hotstar மொபைல் சந்தா மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு கிடைக்கும்.

ALSO READ | Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.419 திட்டம்: ஜியோ ரூ.419 திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா கிடைக்காது, எனவே மொத்தமாக 84ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும். இது தவிர, எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் இந்த திட்டத்தில் கிடைக்கும். இந்த திட்டத்தில் Disney + Hotstar சந்தா கிடைக்காது. ஆனால் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.533 திட்டம்: இந்த திட்டத்தில் 56 நாட்கள் செல்லுபடியாகும். 2ஜிபி தினசரி டேட்டா வரம்புடன் அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் திட்டத்துடன் கிடைக்கும்.

ALSO READ: இந்த திட்டத்தில் ஜியோ-ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News