இந்தியாவில் தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் ட்விட்டரில், போலி செய்திகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என டிவிட்டர் தெரிவித்துள்ளது.
போலி செய்திகள், தவறான செய்திகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதே வேளையில், நம்பகமான தகவல்களை பெறுவதை எளிதாக்குவதே எங்களது குறிக்கோள் என்று ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், கூறியுள்ளது.
தேர்தல்கள் நெருங்கி வரும் நேரத்தில் தவறான செய்திகளை பரப்பி மக்களிடையே குழப்பத்த்தை விளைவிப்பதை தடுக்க, போலியான செய்திகளை கொண்ட பதிவுகள் அகற்றப்படும் என டிவிட்டர் (Twitter) கூறியுள்ளது.
மக்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்று சுதந்திரமாக வாக்களிப்பதற்கு இடையூறு அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை நீக்கப்படும் என டிவிட்டர் கூறியுள்ளது. மேலும் வன்முறை பரப்பும் தகவல்கள், போலி தகவல்களை நீக்கி, டிவிட்டரை ஒரு நம்பகம் வாய்ந்த தளமாக ஆக்குவதே எங்கள் நோக்கம் என டிவிட்டர் தெரிவித்துள்ளது.
"தேர்தல்களுக்கு முன்னதாக, வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களிலும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளிலும் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளுக்கு என தனிப்பட்ட பக்கத்தைத் தொடங்கப்போவதாகவும் ட்விட்டர் கூறியது.
இந்தப் பக்கத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்கள் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்த சமீபத்திய தகவல்களை வழங்க நம்பகமான கணக்குகள் இருந்து செய்யப்படும் ட்வீட்கள் இருக்கும். சட்டமன்றத் தேர்தல்கள் ( Assembly Elections 2021) நான்கு மாநிலங்களில் நடைபெறுகின்றன: தமிழ்நாடு (Tamilnadu), மேற்கு வங்கம், கேரளா, அசாம், மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய இடங்களில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை தேர்தல்கள் நடைபெறுகின்றன. மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
ALSO READ | Twitter பயனர்களின் நெடுநாள் எதிர்பார்ப்பான Undo அம்சம் விரைவில்... ஆனால், ஒரு நிபந்தனை!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR