ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம்: டெலிகாம் ஆபரேட்டர் பார்தி ஏர்டெல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் என்ற புதிய வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்தச் சேவையில், வாடிக்கையாளர்கள் 15 பிரபலமான வீடியோ ஓ.டி.டி இயங்குதளங்களை ஒரே சந்தாவுடன் மாதத்திற்கு ரூ.149 என்ற தொடக்க விலையில் அனுபவிக்க முடியும்.
ஏர்டெல் டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் நாயர், இந்த கட்டண சேவை மூலம் 20 மில்லியன் புதிய பயனர்களைப் பெற முடியும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.
இந்த ஓடிடி ஆப்ஸை நீங்கள் பயன்படுத்தலாம்
இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சேவையில், வாடிக்கையாளர்கள் ஒரே பயன்பாட்டில் 15 இந்திய மற்றும் உலகளாவிய வீடியோ ஓடிடி சேவைகளை அனுபவிக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 10,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கேட்டலாகுடன், சோனிலிவ், எராஸ் நவ், லையன்ஸ்கேட் பிளே, ஹோய்சோய், மனோரமா மேக்ஸ், ஷெமாரூ, அல்ட்ரா, ஹங்காமா பிளே, எபிகான், டாகுபே, டிவோ டிவி, க்ளிக், நம்மஃபிளிக்ஸ், டோலிவுட், ஷார்ட்ஸ் டிவி ஆகியவையும் கிடைக்கும்.
மேலும் படிக்க | விரைவில் OTT-யில் வெளியாக உள்ள படங்கள்!
ஏர்டெல் பயனர்களுக்கு மட்டுமே இந்த சேவை
எக்ஸ்ட்ரீம் பிரீமியம் அதன் முந்தைய உள்ளடக்க சேவையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய சலுகை என்று நிறுவனம் கூறியது. மொபைல், டேப்லெட், லேப்டாப் மற்றும் டிவியில் எக்ஸ்ஸ்ட்ரீம் செட்-டாப்-பாக்ஸில் உள்ள ஆப்ஸ் அல்லது வெப் மூலம் பயனர்கள் இதை அணுகலாம். தற்போது ஏர்டெல் பயனர்களுக்கு மட்டுமே இது கிடைக்கிறது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் ஒவ்வொரு பயனருக்கும் ஒற்றை பயன்பாடு, ஒற்றை சந்தா, ஒற்றை உள்நுழைவு, ஒருங்கிணைந்த உள்ளடக்கத் தேடல் மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தனிப்பயனாக்கப்பட்ட க்யூரேஷன் ஆகியவற்றை வழங்கும்.
ஏர்டெல் பயனர்கள் இந்த அனைத்து வசதிகளின் பலனையும் மாதத்திற்கு வெறும் 149 ரூபாய் செலவில் பெறுவார்கள்.
வளர்ந்து வரும் இந்திய OTT சந்தை
மீடியா பார்ட்னர்ஸ் ஆசியாவின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டளவில், இந்தியாவின் ஓடிடி (ஓவர்-தி-டாப்) சந்தா சந்தை தற்போதைய US$ 500 மில்லியனில் இருந்து US$ 2 பில்லியனாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சந்தாக்களில் பெரும்பகுதி சிறிய நகரங்கள் மற்றும் கிளஸ்டர்களில் உள்ள பயனர்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அமேசான் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி !
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR