ஏர்டெல் பிரீபெயிடு வாடிக்கையாளர்களுகாக புதிய சலுகை ஒன்றை ஜியோவின் திட்டத்திற்கு போட்டியாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜியோவின் ரூ.799 பிளானைத் தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனமும் ரூ.799 பிளானில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி ரூ.799 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3.5 ஜிபி டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
கடந்த வருடம் அறிமுகமான இந்த திட்டத்தில் முதலில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை வழங்கி வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நாள் ஒன்றுக்கு 3.5 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளது. 28 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில் மொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு 98 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
இதனுடன், அளவில்லாத லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை அளிக்கிறது. மேலும், 100 லோக்கல் குறுஞ்செய்திகளையும் தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஜியோவின் ரூ.799 ரீசார்ஜ் பிளான் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஏர்டெல்லின் இந்த புதிய சலுகை மக்களிடம் வரவேற்பை பெறுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.