5G நெட்வொர்க் வேண்டுமா? ஜியோ-ஏர்டெல்-VI வாடிக்கையாளர்கள் இதை செய்யுங்க

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் 5ஜி நெட்வொர்க் வேண்டும் என்றால், ஈஸியான சில வழிமுறைகளை தெரிந்து கொண்டால் போதும் உடனே நெட்வொர்க்கை பெற்றுவிடலாம்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 3, 2022, 06:41 AM IST
  • இந்தியாவில் நடைமுறைக்கு வந்த 5ஜி
  • சென்னை உள்ளிட்ட நகரங்களில் 5ஜி நெட்வொர்க்
  • 5ஜி கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
5G நெட்வொர்க் வேண்டுமா? ஜியோ-ஏர்டெல்-VI வாடிக்கையாளர்கள் இதை செய்யுங்க title=

நாடு முழுவதும் 5ஜி சேவை அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஏர்டெல் நிறுவனம் நேற்று முதல் நாட்டின் 8 முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இதில் டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சிலிகுரி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5ஜி நெட்வொர்க் கிடைக்கின்றன. மற்ற நிறுவனங்களும் வரும் நாட்களில் 5ஜி சேவையை வழங்க தயாராக உள்ளன. சில பயனர்கள் 5G அனுபவத்தைப் பெற 5G ஃபோன்களை வாங்குகின்றனர். சில பயனர்கள் ஏற்கனவே 5G ஆதரவு சாதனங்களைக் கொண்டுள்ளனர்.

அதேநேரத்தில், 5ஜி போன் இருந்தால்கூட இந்த சேவையை பயன்படுத்த முடியாது. இதற்கு நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். Airtel, Jio மற்றும் Vodafone Idea (Vi) பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் 5Gஐ இயக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் படிக்க | 5ஜி நெட்வொர்க்கை ஈஸியாக பெறலாம்; புது சிம்கார்டு வாங்க வேண்டுமா?

1- முதலில், உங்கள் பகுதியில் 5G கிடைக்கிறதா இல்லையா என்பதை உங்கள் ஆபரேட்டரிடம் சரிபார்க்கவும். விவரங்களை அறிய நீங்கள் ஜியோ, ஏர்டெல் அல்லது வியின் வாடிக்கையாளர் சேவையுடன் பேசலாம்.

2- உங்கள் பகுதியில் ஆபரேட்டரிடம் 5ஜி இருந்தால், ஜியோ, ஏர்டெல் அல்லது விஐ வழங்கும் 5ஜி பேண்டுகளுக்கு உங்கள் ஃபோனில் ஆதரவு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

3- இப்போது உங்கள் 5G ஸ்மார்ட்போனின் அமைப்புகளுக்குச் (Settings) சென்று, பின்னர் மொபைல் நெட்வொர்க் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

4- நீங்கள் 5G இணைப்பை இயக்க விரும்பும் ஆபரேட்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5- சிம் 1 அல்லது சிம் 2 ஐக் கிளிக் செய்து, விருப்பமான நெட்வொர்க் வகையைப் பெற கீழே ஸ்கிரால் செய்யவும்.

6-இப்போது 5G/4G/4G/2G (ஆட்டோ)விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் ஸ்மார்ட்ஃபோன் உங்கள் பகுதியில் இயங்கும் 5G நெட்வொர்க்கை தானாகவே கண்டறிந்து அதை உங்கள் மொபைலில் இயல்புநிலை தரவு இணைப்பு விருப்பமாக மாற்றும்.

7- உங்கள் மொபைலில் மென்பொருளைப் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம். எனவே 5G தொடர்பான எந்த அம்சத்திற்கும் ஏதேனும் புதுப்பிப்பு உள்ளதா என்பதை அறிய, அமைப்புகளைச் சரிபார்க்கவும்.

8- இப்போது உங்கள் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து, மீண்டும் ஆன் செய்யுங்கள். உங்கள் வட்டம்/பகுதியில் 5G இருந்தால் அது செயல்படத் தொடங்கும்.

மேலும் படிக்க | விடிய விடிய பயன்படுத்தலாம்.. பேட்டரியே போகாது; குறைவான விலையில் பெஸ்ட் 12 ஜிபி RAM மொபைல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News