5G ஆல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு காத்திருக்கும் தலைவலி

5ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகப்போகும் நிலையில், அதனால் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு ஏற்படும் தலைவலி ஏற்படப்போகிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 5, 2022, 01:15 PM IST
  • 5ஜி ஸ்மார்ட்போன்கள்
  • பேட்டரி ஆயுள் நீடிக்குமா?
  • வல்லுநர்களின் கருத்து இதுதான்
5G ஆல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு காத்திருக்கும் தலைவலி title=

இந்திய அடுத்த இணைய பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி ஏலம் நிறைவடைந்துவிட்டது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா, அதானியின் டெலிகாம் நிறுவனங்கள் பங்கேற்றன. ஏலத்தின் முடிவில் பெரும்பான்மையான அலைக்கற்றை உரிமத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அந்த நிறுவனம் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று 5ஜி அலைக்கற்றையை முதன்முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை படுவேகமாக முடுக்கிவிட்டுள்ளது. 

இப்போது, 30 நொடிகளில் பதிவிறக்கமாகும் வீடியோ 5ஜி செயல்பாட்டுக்குப் வந்த பின்னர் ஒரு சில விநாடிகளில் பதிவிறக்கம் ஆகும். அந்தளவுக்கு இணையத்தின் வேகம் இருக்கும். படம், வீடியோ கால் ஆகியவற்றின் தரம் மற்றும் பரிமாறக்கூடிய வேகம் எல்லாம் இதுவரை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், கூடவே, ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு மிகப்பெரிய தலைவலி காத்திருக்கிறது. 

மேலும் படிக்க | பிரதமருக்காக விரைவில் வாங்கப்படும் விலையுயர்ந்த மின்சார கார்!

5ஜி நடைமுறைக்கு வந்த பிறகு ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு பேட்டரி மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் என டெக் நிபுணர்கள் கூறியுள்ளனர். 3ஜி மற்றும் 4ஜி இணைய வேகத்துக்கே அதிகளவு பேட்டரி யூசேஜ் இருக்கும் நிலையில், 5ஜி இணைய வேகம் இவற்றை விட பன்மடங்கு அதிகம். இதனால், நீண்ட நேரம் பேட்டரி லைப் என்பதெல்லாம் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என டெக் வல்லுநர்கள் கணித்துள்ளனர். அனைவரும் மினி பவர்பேங்குகளை கையில் வைத்துக் கொண்டு இருக்க வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேநேரத்தில் 5ஜி தொழில்நுட்பத்துக்குப் ஏற்ப முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பேட்டரியின் தரத்தை உயர்த்துவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். தொழில்நுட்ப சவால்களை சமாளிக்கும் வகையில், தொலைபேசி நிறுவனங்களும் அப்கிரேடுக்கு தயாராகி வருகின்றனர்.

மேலும் படிக்க | கூகுளிடம் இருக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்: நீக்குவதற்கான வழிமுறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News