3D முகமூடி ஐபோன் X-ஐ முட்டாளாக்கியதா? வீடியோ

அப்பிளின் ஐபோன் X ஸ்மாபர்ட்போனின் பேஸ் ஐடி அங்கீகார முறையை 3D முறையில் பிரின்ட் செய்யப்பட்ட முகமூடி முட்டாளாக்கியுள்ளது. 

Last Updated : Nov 14, 2017, 12:40 PM IST
3D முகமூடி ஐபோன் X-ஐ முட்டாளாக்கியதா? வீடியோ title=

அப்பிளின் ஐபோன் X ஸ்மாபர்ட்போனின் பேஸ் ஐடி அங்கீகார முறையை 3D முறையில் பிரின்ட் செய்யப்பட்ட முகமூடி முட்டாளாக்கியுள்ளது. 

வியட்நாமை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய முகமூடியில் ஆப்பிள் பேஸ் ஐடியை ஏமாற்றி போனினை அன்லாக் செய்துள்ளது. 

வியாட்நாமை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான காவ் 150 டாலர்கள் செலவில் முகமூடி ஒன்றை உருவாக்கி ஆப்பிள் ஃபேஸ் ஐடியை முறியடித்துள்ளது. 

மற்ற பாகங்கள் 2D பிரின்டிங் மூலம் உருவாக்கப்பட்ட நிலையில் மூக்கு மட்டும் வரைபட கலைஞரால் உருவாக்கப்பட்டது. 3D பிரின்டிங், மேக்கப் மற்றும் 2D படங்களை ஒன்றிணைத்து முகமூடி உருவாக்கப்பட்டுள்ளது. 

முகத்தில் உள்ள கன்னம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நிலையில், மற்ற பகுதிகள் மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டதாக காவ் சைபர் செக்யூரிட்டி துணை தலைவர் கோ டுவான் அன் தெரிவித்தார். 

இந்த வழிமுறை நாங்கள் எதிர்பார்த்த அளவு கடினமாக இல்லை என பிகாவ் தெரிவித்துள்ளார். ஆப்பிள் ஃபேஸ் ஐடி பாதுகாப்பு எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பதை தெளிவாக விளக்கும் வீடியோவினை பிகாவ் செக்யூரிட்டி வல்லுநர்கள் யூடியூபில் பதிவிட்டுள்ளனர். 

இந்த வீடியோ ஆப்பிள் புதிய தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு தன்மையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. வீடியோ பார்க்க:-

 

Trending News