உச்ச நீதிமன்றம் அதிரடியால் ஒரே நாளில் 14690 கோடி அரசு கருவூலத்தில்....

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில்,  ஒரே நாளில் அரசு கருவூலத்தில் ரூ. 14690 கோடி .

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 17, 2020, 09:44 PM IST
உச்ச நீதிமன்றம் அதிரடியால் ஒரே நாளில் 14690 கோடி அரசு கருவூலத்தில்.... title=

புது டெல்லி: ஏர்டெல்லுக்குப் பிறகு, வோடபோன் ஐடியா மற்றும் டாடா குழுமமும் ஏஜிஆர் நிலுவைத் தொகையை திங்களன்று அரசாங்கத்திற்கு செலுத்தியது. வாக்குறுதியளித்தபடி ஏர்டெல் இன்று 10 ஆயிரம் கோடியை செலுத்திவிட்டது. வோடபோன் ஐடியா ரூ .2500 கோடியும், டாடா குழுமம் ரூ .2190 கோடியும் செலுத்தி உள்ளன அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் இந்த தகவலை வழங்கியுள்ளன. ஏஜிஆர் நிலுவைத் தொகை பாக்கி வைத்துள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அந்த நிறுவனங்கள் முழு நிலுவைத் தொகையை மார்ச் 17 க்கு முன்பு திருப்பிச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டதை அடுத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையை செலுத்தி வருகின்றனர்.

உரிமம் ரத்து செய்யப்படும் என்ற பயம்..
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தொலைத் தொடர்புத் துறைக்கு (DoT - Department of Telecommunications) நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றால், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டது. அவர்கள் நிலுவை தொகையை செலுத்தாத சூழ்நிலையில், நிறுவனங்களின் வங்கி வைப்புகளை சீல் வைக்க முடியும். அதற்கு அடுத்த நடவடிக்கையாக உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

ஏர்டெல் 10 ஆயிரம் கோடி செலுத்தியது:
ஏர்டெல் (Aairtel) நிலுவைத் தொகையை செலுத்திய மீதமுள்ள நிலுவைத் தொகையை விரைவில் செலுத்தப்படும் என்று கூறியுள்ளது. ஏர்டெல் உரிம கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் உள்பட கிட்டத்தட்ட சுமார் ரூ.35,586 கோடி நிலுவைத் தொகையை பாரதி ஏர்டெல் நிறுவனம் வைத்துள்ளது. சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் தொலைத்தொடர்பு துறைக்கு எழுதிய கடிதத்தில், "பாரதி ஏர்டெல், பாரதி ஹெக்ஸாகாம் மற்றும் டெலினோர் சார்பாக ரூ .10,000 கோடி வழங்கப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

ஏர்டெல், வோடபோன் Idea உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கெடு!!

வோடபோன் சுமார் 53000 கோடி பாக்கி தொகை:
வோடபோன் நிறுவனம் சுமார் ரூ .53000 கோடி நிலுவைத் தொகையை செலுத்த வேண்ட்டியிருந்தது. இதேபோல், டாடா குழுமத்தின் உரிம கட்டணம் 9987 கோடியும் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணம் சுமார் 3836 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் 24 தேதியிட்ட உச்சநீதிமன்றம், நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்குள் நிலுவைத் தொகையை (ஜனவரி 23 வரை) திருப்பிச் செலுத்துமாறு உத்தரவிட்ட்டது. அதனையடுத்து நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை மறுபரிசீலனை செய்யுமாறு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து ஒரு மனுவைத் தாக்கல் செய்தன. ஆனால் அது வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) தள்ளுபடி செய்யப்பட்டது.

பாரதி ஏர்டெல் நிறுவனமும் செல்பேசி அழைப்பு மற்றும் இன்டர்நெட் சேவைக்காக கட்டணத்தை உயர்த்தியுள்ளது!

ஜியோ முழு நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளது:
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு நிலுவைத் தொகையாக ரூ .1.47 லட்சம் கோடியை டெபாசிட் செய்ய வேண்டும். இதிலிருந்து ரூ .1.13 லட்சம் கோடியை மீட்டெடுக்க முடியும் என்று மத்திய அரசாங்கம் நம்புகிறது. 

இந்த விவகாரத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் "திவால்" நிலையில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மொத்த நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளது.

Trending News