தென் இந்தியாவில் அடி எடுத்து வைத்தது Zee Media: 4 மொழிகளில் செய்தி சேனல்கள்

தென்னிந்தியாவில் கன்னடம், தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய 4 மொழிகளில் பிராந்திய செய்தி சேனல்களை தொடங்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2022, 10:54 AM IST
தென் இந்தியாவில் அடி எடுத்து வைத்தது Zee Media: 4 மொழிகளில் செய்தி சேனல்கள் title=

Zee Media launches 4 digital news channels: 6 வெவ்வேறு மொழிகளில் 14 செய்தி சேனல்களுடன் 26 ஆண்டுகள் பழமையான செய்தி நெட்வொர்க் தான் Zee Media. 220 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் 362 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களையும் கொண்டுள்ள செய்தி ஊடகம் Zee Media ஆகும்.

செய்திப் பணியகங்கள் மற்றும் நிருபர்களுடன் வேகமாக வளர்ந்து வரும் செய்தி சேனல்களில் ஒன்றான ஜீ மீடியா, காம்ஸ்கோரின் (digital data analysis company) பொதுச் செய்தி வகையின்படி, டிஜிட்டல் தளத்தில் ஜீ குழுமம் இந்தியாவின் நம்பர் 1 செய்தி நெட்வொர்க். எனவே, ZEE மீடியா இந்திய மக்களால் மிகவும் நம்பப்படும் நெட்வொர்க்குகளில் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது.

நாட்டிலேயே முதல் முறையாக தென் இந்திய மொழிகளில் டிஜிட்டல் டிவியை அறிமுகப்படுத்தும் ZEE MEDIA

இந்த நிலையில் தற்போது தென்னிந்தியாவில் கன்னடம், தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய 4 மொழிகளில் பிராந்திய செய்தி சேனல்களை தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேனல்களை ஜீ மீடியாவின் நிறுவனரும்,  தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான டாக்டர். சுபாஷ் சந்திரா துவக்கி காணொளி வழியாக வைத்துள்ளார். 

தமிழில் 'ஜீ தமிழ் நியூஸ்', கனடாவில் 'ஜீ கன்னடா நியூஸ்', தெலுங்கில் 'ஜீ தெலுங்கு நியூஸ்' மற்றும் மலையாளத்தில் 'ஜீ மலையாளம் நியூஸ்' என நான்கு வெவ்வேறு சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. 

Zee மீடியாவின் கூற்றுப்படி, இந்த சேனல்களைத் தொடங்குவதன் நோக்கம், தென் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைந்து அவர்களுடன் அவர்களின் சொந்த மொழியில் இணைவதாகும். நாடு, உலகம் மட்டுமின்றி, மாநிலங்களின் மூலை முடுக்கிலிருந்தும் செய்திகளை கொண்டு வருவதே முக்கிய குறிக்கோளாக இருக்கும். டிஜிட்டல் சேனலாக இருப்பதால், உள்ளடக்கத்தின் வரம்பும் பன்முகத்தன்மையும் மிகப்பெரியதாக இருக்கும். தென் இந்திய மக்கள் பொதுவாக செய்திகளுக்கு மட்டுமே டிஜிட்டல் முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆகையால் நான்கு தென்மாநிலங்களிலும் மக்களின் முதல் தேர்வாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

ZEE

Zee Media செய்தி ஊடகத் துறையில் 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. Zee Media 6 வெவ்வேறு மொழிகளில் 14 செய்தி சேனல்களைக் கொண்டுள்ளது. இந்த சேனல்களுக்கு சுமார் 220 மில்லியன் பார்வையாளர்கள் உள்ளனர். இதனுடன், டிஜிட்டல் தளத்தில் 362 மில்லியன் பயனர்கள் உள்ளனர். Zee Media இந்தியா முழுவதும் செய்திப் பணியகங்கள் மற்றும் நிருபர்களுடன் வேகமாக வளர்ந்து வரும் செய்தி சேனல் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | நாட்டிலேயே முதல் முறையாக தென் இந்திய மொழிகளில் டிஜிட்டல் டிவியை அறிமுகப்படுத்தும் ZEE MEDIA

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News