நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்: முதலவர் எடப்பாடி பழனிசாமி!!

Last Updated : Jul 26, 2017, 03:26 PM IST
நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்: முதலவர் எடப்பாடி பழனிசாமி!! title=

நேற்று முன் தினம் இரவு டெல்லி சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை நேற்று (ஜூலை 25) காலை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு குறித்து ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்பிறகு புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.

பின்னர் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடுவை அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பினார். 

சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

"நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற்று தருமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் அதை பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார்".

என்று கூறினார்.

Trending News