குற்றாலம்: இறப்பிலும் இணைபிரியா ஜோடி என்று நிரூபித்திருக்கும் குத்தால தம்பதிகளின் பாசப்பிணைப்பு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழந்த விஷயம் அனைவருக்கும் அதிர்ச்சியையும் எழுப்பியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இந்த அளவு பாசம் வைக்க முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்தார். இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினரின் மரணம், கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. 48 ஆண்டு கால தாம்பத்தியத்தின் முடிவு ஒரே நாளில் இருவருக்கும் வந்தது வியப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழ காலனியைச் சேர்ந்தவர் குணசீலன். இவருடைய மனைவி தமிழரசி. தற்போது 74 வயதை எட்டிய குணசீலனுக்கு திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது. 68 வயதான தமிழரசியுடன் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் குணசீலன். குணசீலன் - தமிழரசி தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
மேலும் படிக்க | பிரதமரின் சென்னை வருகை - விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
பிள்ளைகள் மூன்று பேருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்களது பூர்வீக வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் திடீர் உடல்நல குறைவு காரணமாக குணசீலன் அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார்.
48 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது கணவர் பிரிந்த துக்கம் தாங்காமல் தமிழரசி அடுத்த சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்தார். அவரது மயக்கம் மீளா மயக்கமாகிவிட்டது. பாசத்தை மட்டுமே முதலீடு செய்து வழ்ந்த தம்பதிகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் மரணம் ஏற்பட்டது ஆச்சரியமாக உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
பெற்றோர் இருவருக்கும் மகன் இளையராஜா வீட்டில் இறுதி சடங்குகள் நடந்தேறின. இறந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்து இருவரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டதைப் பார்த்து கிராமமே கண்கலங்கி நின்றது.
கணவனின் இறுதிச் சடங்கை பார்க்காமல் அவருடனே தனக்கும் இறுதிச் சடங்கு செய்துக் கொண்ட மனைவி என்று பலரும் பேசிக் கொள்கின்றனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க அன்பில் மகேஷ் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ