‘நான் வெளிநாடு செல்வதை மட்டும் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவது ஏன்?’: EPS

தனது வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி பேசுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Last Updated : Aug 28, 2019, 10:31 AM IST
‘நான் வெளிநாடு செல்வதை மட்டும் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவது ஏன்?’: EPS title=

தனது வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி பேசுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னையில் இருந்து இன்று லண்டன் புறப்பட்டுச் செல்லும் அவர், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளை கண்டறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இங்கிலாந்தின் அவசர ஆம்புலன்ஸ் சேவை மற்றும் சக்போல்ஸ் நகரில் உள்ள ஐ பி ஸ்விட்ச் ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து, இந்துஜா உள்ளிட்ட தொழிலதிபர்களையும், இங்கிலாந்து எம்.பி.க்களையும் முதலமைச்சர் சந்தித்துப் பேச உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி வெளிநாடு புறப்படுவதற்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்; தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அதற்காகத்தான் இந்த பயணம். நான் நேரில் சென்று அழைத்தால்தான் தமிழகத்தில் தொழில் தொடங்க தொழிலதிபர்கள் முன்வருவார்கள்.

நான் ஒன்றும் பெரிய தொழிலதிபர் இல்லை, சாதாரண விவசாயி. தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும், பொருளாதரம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் இந்த பயணம்.

மேலும், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்? அவர் அடிக்கடி வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன? அவர் வெளிநாடு செல்வதற்கான காரணத்தை இதுவரை சொன்னதில்லை. நான் வெளிநாடு செல்வதை மட்டும் கொச்சைப்படுத்தி பேசுகிறார் ஸ்டாலின். அரசுமுறைப் பயணத்தை சொந்த பயணம் என சொல்வது தவறான கருத்து” எனதரு அவர் தெரிவித்துள்ளார். 

 

Trending News