தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?

Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் உள்ள மொத்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடுகிறது? அந்த கட்சியின் வேட்பாளர் யார் ? என அரசியல் கட்சிகளின் முழுமையான வேட்பாளர் பட்டியல் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 15, 2024, 06:08 PM IST
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி? title=

Tamil Nadu Lok Sabha Election 2024 Full Candidates List: நாட்டின் 18வது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, தேர்த களம் சூடுபிடித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், தமிழ்நாடு பரபரப்பாக உள்ளது. வரும் ஜூன் 4 ஆம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

தமிழ்நாட்டில் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி முதல் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வரை என மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் பல்வேறு பின்னணி கொண்ட வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளுக்கு சேவை செய்யும் வாய்ப்புக்காக போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் உள்ளூர் பிரச்சினைகள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான வாக்குறுதிகள் அளித்து மக்களவைத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டை பொறுத்த வரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி களத்தில் உள்ளது. 

மேலும் படிக்க - தமிழ்நாட்டில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன? அதன் முழு பட்டியல் காண்க!

தமிழ்நாட்டில் உள்ள மொத்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடுகிறது? அந்த கட்சியின் வேட்பாளர் யார் ? என அரசியல் கட்சிகளின் முழுமையான வேட்பாளர் பட்டியல் குறித்து பார்ப்போம்.

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 வேட்பாளர் பட்டியல்

அரக்கோணம்

எஸ்.ஜெகத்ரட்சகன் (திராவிட முன்னேற்றக் கழகம்)
ஏ.எல்.விஜயன் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
கே.பாலு (பாட்டாளி மக்கள் கட்சி)
அஃப்சியா நஸ்ரின் (நாம் தமிழர் கட்சி)

ஆரணி மக்களவைத் தொகுதி

தரணி வேந்தன் (திராவிட முன்னேற்றக் கழகம்)
கஜேந்திரன் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
கணேஷ் குமார் (பாட்டாளி மக்கள் கட்சி)
ஜி.பாக்கியலட்சுமி (நாம் தமிழர் கட்சி)

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி

தயாநிதி மாறன் (திராவிட முன்னேற்றக் கழகம்)
கார்த்திகேயன் (நாம் தமிழர் கட்சி)
வினோத் பி செல்வம் (பாரதிய ஜனதா கட்சி)
பார்த்தசாரதி (தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்)

மேலும் படிக்க - Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு... தமிழ்நாட்டில் எப்போது தெரியுமா?

வட சென்னை மக்களவைத் தொகுதி

டாக்டர் கலாநிதி வீராசாமி (திராவிட முன்னேற்றக் கழகம்)
ராயபுரம் மனோகரன் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
ஆர்.சி.பால் கனகராஜ் (பாரதிய ஜனதா கட்சி)
அமுதினி (நாம் தமிழர் கட்சி)

தென் சென்னை மக்களவைத் தொகுதி

தமிழச்சி தங்கபாண்டியன் (திராவிட முன்னேற்றக் கழகம்)
ஜெயவர்தன் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
தமிழிசை சௌந்தரராஜன் (பாரதிய ஜனதா கட்சி)
தமிழ் செல்வி (நாம் தமிழர் கட்சி)

சிதம்பரம் மக்களவைத் தொகுதி

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
சந்திரஹாசன் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
கார்த்தியாயினி (பாரதிய ஜனதா கட்சி)
ஜான்சி ராணி (நாம் தமிழர் கட்சி)

கோவை மக்களவைத் தொகுதி

கணபதி ராஜ்குமார் (திராவிட முன்னேற்றக் கழகம்)
சிங்கை ராமச்சந்திரன் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
கே.அண்ணாமலை (பாரதிய ஜனதா கட்சி)
கலாமணி (நாம் தமிழர் கட்சி)

மேலும் படிக்க - லோக்சபா தேர்தல் 2024: உங்கள் ஒரு ஓட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது

கடலூர் மக்களவைத் தொகுதி

டாக்டர் எம்.கே. விஷ்ணு பிரசாத் (இந்திய தேசிய காங்கிரஸ்)
தங்கர் பச்சான் (பாட்டாளி மக்கள் கட்சி)
சிவக்கொழுந்து (தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்)
மணிவாசகன் (நாம் தமிழர் கட்சி)

தருமபுரி மக்களவைத் தொகுதி

அ.மணி (திராவிட முன்னேற்றக் கழகம்)
அசோகன் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
சௌமியா (பாட்டாளி மக்கள் கட்சி)
அபிநயா (நாம் தமிழர் கட்சி)

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி

ஆர் சச்சிதானந்தம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்))
திலகபாமா (பாட்டாளி மக்கள் கட்சி)
நெல்லை முபாரக் (இந்திய சமூக ஜனநாயகக் கட்சி)
நிரஞ்சனா (நாம் தமிழர் கட்சி)

ஈரோடு மக்களவைத் தொகுதி

அட்ரல் அசோக்குமார் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
கார்மேகம் (நாம் தமிழர் கட்சி)
பிரகாஷ் (திராவிட முன்னேற்றக் கழகம்)
விஜயகுமார் (தமிழ் மாநில காங்கிரஸ்)

மேலும் படிக்க - தேர்தல் முடிந்தாலும் ஜூன் 4 வரை கட்டுபாடுகள் தொடரும் -சத்ய பிரதா சாஹு

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி

மலையரசன் (திராவிட முன்னேற்றக் கழகம்)
குமரகுரு (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
தேவதாஸ் (பாட்டாளி மக்கள் கட்சி)
ஜெகதீசன் (நாம் தமிழர் கட்சி)

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி

ஜி.செல்வம் (திராவிட முன்னேற்றக் கழகம்)
ஈ.ராஜசேகர் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
வி.ஜோதி (பாட்டாளி மக்கள் கட்சி)
சந்தோஷ்குமார் (நாம் தமிழர் கட்சி)

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி

விஜய் வசந்த் (இந்திய தேசிய காங்கிரஸ்)
பஸ்லியான் நாசரேத் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
பொன் ராதாகிருஷ்ணன் (பாரதிய ஜனதா கட்சி)
மரியா ஜெனிபர் (நாம் தமிழர் கட்சி)

கரூர் மக்களவைத் தொகுதி

எஸ்.ஜோதிமணி (இந்திய தேசிய காங்கிரஸ்)
தங்கவேல் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
வி வி. செந்தில்நாதன் (பாரதிய ஜனதா கட்சி)
கருப்பையா (நாம் தமிழர் கட்சி)

மேலும் படிக்க - மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.. உஷார்!

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி

கே. கோபிநாத் (இந்திய தேசிய காங்கிரஸ்)
ஜெயபிரகாஷ் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
சி நரசிம்மன் (பாரதிய ஜனதா கட்சி)
வித்யா வீரப்பன் (நாம் தமிழர் கட்சி)

மதுரை மக்களவைத் தொகுதி

சு.வெங்கடேசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்))
சரவணன் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
பேராசிரியர் ராமஸ்ரீனிவாசன் (பாரதிய ஜனதா கட்சி)
சத்யாதேவி (நாம் தமிழர் கட்சி)

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி

ஆர்.சுதா (இந்திய தேசிய காங்கிரஸ்)
பாபு (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
ஸ்டாலின் (பாட்டாளி மக்கள் கட்சி)
பி.காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி)

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி

வி செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
சுர்ஜித் சங்கர் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
எஸ்ஜிஎம் ரமேஷ் (பாரதிய ஜனதா கட்சி)
எம்.கார்த்திகா (நாம் தமிழர் கட்சி)

மேலும் படிக்க - A டூ Z.. கொடி பறக்குது! காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள் பட்டியல்

நாமக்கல் மக்களவைத் தொகுதி

மாதேஸ்வரன் (திராவிட முன்னேற்றக் கழகம்)
தமிழ் மணி (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
கே.பி.ராமலிங்கம் (பாரதிய ஜனதா கட்சி)
கனிமொழி (நாம் தமிழர் கட்சி)

நீலகிரி மக்களவைத் தொகுதி

ஆ.ராஜா (திராவிட முன்னேற்றக் கழகம்)
லோகேஷ் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
டாக்டர் எல் முருகன் (பாரதிய ஜனதா கட்சி)
ஜெயக்குமார் (நாம் தமிழர் கட்சி)

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி

அருண் நேரு (திராவிட முன்னேற்றக் கழகம்)
சந்திரமோகன் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
டிஆர் பாரிவேந்தர் (பாரதிய ஜனதா கட்சி)
ஆர் தேன்மொழி (நாம் தமிழர் கட்சி)

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி

ஈஸ்வரசாமி (திராவிட முன்னேற்றக் கழகம்)
கார்த்திக் அப்புசாமி (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
கே.வசந்தராஜன் (பாரதிய ஜனதா கட்சி)
சுரேஷ் குமார் (நாம் தமிழர் கட்சி)

மேலும் படிக்க - தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி

கே. நவஸ்கனி (இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்)
ஜெயபெருமாள் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
ஓ.பன்னீர்செல்வம் (சுயேட்சை)
சந்திரபிரபா (நாம் தமிழர் கட்சி)

சேலம் மக்களவைத் தொகுதி

டி.எம்.செல்வகணபதி (திராவிட முன்னேற்றக் கழகம்)
விக்னேஷ் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
அண்ணாதுரை (பாட்டாளி மக்கள் கட்சி)
மனோஜ்குமார் (நாம் தமிழர் கட்சி)

சிவகங்கை மக்களவைத் தொகுதி

ஏ.கார்த்தி சிதம்பரம் (இந்திய தேசிய காங்கிரஸ்)
சைவர் தாஸ் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
டாக்டர் தேவநாதன் யாதவ் (பாரதிய ஜனதா கட்சி)
எழிலரசி (நாம் தமிழர் கட்சி)

மேலும் படிக்க - 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்... நாடு முழுவதும் உரிமைத்தொகை - திமுக தேர்தல் அறிக்கை

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி

ரவிச்சந்திரன் (நாம் தமிழர் கட்சி)
வேணுகோபால் (தமிழ் மாநில காங்கிரஸ்)
பிரேம் குமார் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
டி.ஆர்.பாலு (திராவிட முன்னேற்றக் கழகம்)

தென்காசி மக்களவைத் தொகுதி

ராணி ஸ்ரீகுமார் (திராவிட முன்னேற்றக் கழகம்)
டாக்டர் கிருஷ்ணசாமி புதிய தமிழகம்
பி.ஜான் பாண்டியன் (பாரதிய ஜனதா கட்சி)
இசை மதிவாணன் (நாம் தமிழர் கட்சி)

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி

முரசொலி (திராவிட முன்னேற்றக் கழகம்)
எம் முருகானந்தம் (பாரதிய ஜனதா கட்சி)
சிவசேசன் (தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்)
எம்.ஈ.ஹுமாயுன் கபீர் (நாம் தமிழர் கட்சி)

மேலும் படிக்க - அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்! மகளிர் உரிமைத்தொகை உயர்வு..வேறு என்ன?

தேனி மக்களவைத் தொகுதி

தங்க தமிழ்செல்வன் (திராவிட முன்னேற்றக் கழகம்)
வி.டி.நாராயணசாமி (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
டிடிவி தினகரன் (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்)
மதன் ஜெயபால் (நாம் தமிழர் கட்சி)

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி

சசிகாந்த் செந்தில் (இந்திய தேசிய காங்கிரஸ்)
பொன். வி பாலகணபதி (பாரதிய ஜனதா கட்சி)
நல்லதம்பி (தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்)
ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர் கட்சி)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி

கனிமொழி கருணாநிதி (திராவிட முன்னேற்றக் கழகம்)
சிவசாமி வேலுமணி (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
விஜயசீலன் (தமிழ் மாநில காங்கிரஸ்)
ரோவினா ரூத் ஜென் (நாம் தமிழர் கட்சி)

மேலும் படிக்க - Electoral Bonds : அதிக நன்கொடை பெற்ற டாப் 10 கட்சிகள்.... பாஜக டூ அதிமுக வரை! 

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி

துரை வைகோ (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்)
கருப்பையா (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
செந்தில்நாதன் (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்)
டி ராஜேஷ் (நாம் தமிழர் கட்சி)

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி

டாக்டர். சி ராபர்ட் புரூஸ் (இந்திய தேசிய காங்கிரஸ்)
ஜான்சி ராணி (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
நைனார் நாகேந்திரன் (பாரதிய ஜனதா கட்சி)
சத்யா திருநெல்வேலி (நாம் தமிழர் கட்சி)

திருப்பூர் மக்களவைத் தொகுதி

கே சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
அருணாச்சலம் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
ஏ.பி.முருகானந்தம் (பாரதிய ஜனதா கட்சி)
சீதா லட்சுமி (நாம் தமிழர் கட்சி)

மேலும் படிக்க - மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்... மக்கள் அதிகம் நம்புவது எதை? - முடிவுகள் இதோ!

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி

சி.என்.அண்ணாதுரை (திராவிட முன்னேற்றக் கழகம்)
கலியபெருமாள் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
அஸ்வதாமன் (பாரதிய ஜனதா கட்சி)
ரமேஷ்பாபு (நாம் தமிழர் கட்சி)

வேலூர் மக்களவைத் தொகுதி

கதிர் ஆனந்த் (திராவிட முன்னேற்றக் கழகம்)
பசுபதி (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
ஏசி சண்முகம் (பாரதிய ஜனதா கட்சி)
மகேஸ் ஆனந்த் (நாம் தமிழர் கட்சி)

விழுப்புரம் மக்களவைத் தொகுதி

டி ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
பாக்கியராஜ் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
முரளிசங்கர் (பாட்டாளி மக்கள் கட்சி)
பேச்சிமுத்து (நாம் தமிழர் கட்சி)

விருதுநகர் மக்களவைத் தொகுதி

பி.மாணிக்கம் தாகூர் (இந்திய தேசிய காங்கிரஸ்)
ஸ்ரீமதி. ராதிகா சரத்குமார் (பாரதிய ஜனதா கட்சி)
விஜயபிரபாகரன் (தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்)
அருள்மொழித்தேவன் (நாம் தமிழர் கட்சி)

மேலும் படிக்க - Election 2024: டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் - அம்மாடி தமிழக வேட்பாளர்கள் எத்தனை பேர் பாருங்க?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News