செப்டம்பர் 6 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

Weather update: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழையுடன் மேகமூட்டமான வானம் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2021, 02:03 PM IST
  • அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான முதல் இடியுடன் கூடிய மழை.
  • அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும்.
  • அதிகபட்சமாக சேலம் ஏத்தாப்பூரில் 13 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
செப்டம்பர் 6 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் title=

Weather update: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre, Chennai) இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதேபோல இந்திய வானிலை மையத்தின் (IMD) படி, அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி (Tamil Nadu and Puducherry) மற்றும் காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழையுடன் மேகமூட்டமான வானம் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்துள்ளது. 

நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (செப்டம்பர் 3) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று ஐஎம்டி (Indian Meteorological Department) கணித்துள்ளது. 

ALSO READ | Viral Video: இதுபோன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்

அதேபோல், செப்டம்பர் 4 ஆம் தேதி, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மட்டுமே கன மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. ஆனாலும் தமிழக மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

நேற்று (செப்டம்பர் 2) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 சென்டிமீட்டர் சராசரி மழையும், திருவண்ணாமலை மாவட்டத்தின் கலசப்பாக்கத்தில் 12 செ.மீ. திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூரில் சராசரியாக 6 செமீ மழை பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் ஆகிய இடங்களில் நேற்று (வியாழக்கிழமை) சராசரியாக 5 செமீ மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் ஏத்தாப்பூரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | இடா புயல் எதிரொலி - சாலைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News