தமிழகம் முழுவதும் இன்று துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழகம் முழுவதும் இன்று துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 17, 2019, 10:10 AM IST
தமிழகம் முழுவதும் இன்று துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு! title=

தமிழகம் முழுவதும் இன்று துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின்ன 27 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9-ஆம் தேதி துவங்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் டிசம்பர் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வேட்பு மனு தாக்கல் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகிய 4 பிரிவுகளில் தேர்தல் நடத்தப்படும் தேர்தலில், இதில் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 2 பதவிகளுக்கு கட்சி சார்பின்றியும், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட வார்டு உறுப்பினர் ஆகிய 2 பதவிகளுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிட் லட்சக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்தின் 37 மாவட்டங்களில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த 27 மாவட்டங்களிலும் முதல் கட்டமாக வருகிற 27-ஆம் தேதி 4,700 ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 37,830 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்கள், 260 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

இரண்டாம் கட்ட தேர்தலில் (30-ஆம் தேதி நடைபெறும்) 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டு விட்டது. கடந்த ஜூன் 30ம் தேதி வரை சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் அதில் உள்ளன. அதன்பின்பும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு தொடர்பாக கடந்த 6ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக கூறியுள்ளார்.  

அவற்றில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டு துணைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் துணைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

அடுத்த மாதம் 25ம் தேதி 10வது தேசிய வாக்காளர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, வாக்குச்சாவடிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

Trending News