வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த 11 நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணி அளவில் காலமானார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அங்கு இடம் ஒதுக்க முடியாது எனவும், பல சட்ட சிக்கல்கள் உள்ளது. காமராஜ் நினைவகம் அருகே 2 ஏக்கர் நிலம ஒதுக்கப்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் அறிவிப்புக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பல இடங்களில் திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். காவேரி மருத்துவமனை முன்பு வைக்கப்பட்டு இருந்த தடிப்புக்களை தூக்கி எரிந்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.