தேர்தல் 2024: மோடியை கடுமையாக விமர்சிக்கும் கதிர் ஆனந்த் - வேலூர் நிலவரம் என்ன?

Vellore DMK Candidate Kathir Anand: வேலூர் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 16, 2024, 12:36 AM IST
  • 3வது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் மக்களின் கஜானா காலியாகிவிடும் - கதிர் ஆனந்த்
  • பத்தலப்பல்லி அணை விரைவாக கட்டி முடிக்கப்படும் - கதிர் ஆனந்த்
  • பத்தலபல்லி ஆற்றில் தரைப்பாலம் கட்டித் தரப்படும் - கதிர் ஆனந்த்
தேர்தல் 2024: மோடியை கடுமையாக விமர்சிக்கும் கதிர் ஆனந்த் - வேலூர் நிலவரம் என்ன? title=

Vellore DMK Candidate Kathir Anand: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளும், புதுச்சேரியும் அடங்கும். ஜூன் 1ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கதிர் ஆனந்த் மீண்டும் போட்டி... 

அந்த வகையில், தமிழ்நாட்டில் திமுக தலைமயிலான இந்தியா கூட்டணி, பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக கூட்டணி என மும்முனை போட்டிகள் நிலவுகிறது. குறிப்பாக, தென் சென்னை, கோவை, நீலகிரி, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தர்மபுரி உள்ளிட்ட தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக பார்க்கப்படுகிறது. 

இதில் வேலூர் தொகுதியை அடக்கலாம். திமுகவின் சிட்டிங் எம்பி.,யான கதிர் ஆனந்த் மீண்டும் இம்முறை போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பசுபதியும், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். இதில் ஏ.சி சண்முகம் தாமரை சின்னத்தில் இந்த தேர்தலை சந்திக்கிறார். வரும் ஏப். 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால் தேர்தல் பரப்புரை வரும் ஏப். 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, பரபரப்பாக தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | தேர்தல் 2024: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வரலாறு

மக்களின் கஜானா காலியாகிவிடும்

இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு, சாக்கர், பத்தலபல்லி உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஏப். 15ஆம் தேதி அன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது பத்திரப்பல்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
மேலும் அங்கு பேசிய கதிர் ஆனந்த்,"கடந்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. அடுத்து மோடி ஆட்சி அமைந்தால் இன்னும் விலைவாசி கடுமையாக உயரும். இதனால் பொதுமக்கள் ஏற்கனவே பாதி பேர் கடன்காரர்களாக இருக்கின்றனர். மேலும் மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் கஜானா காலி ஆகிவிடும்" என்றார். அவர் தொடர்ந்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். 

பத்தலப்பல்லி அணை விவகாரம்...

மேலும் இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்தலப்பல்லி அணை விரைவாக கட்டி முடிக்கப்படும் எனவும் இந்த பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தேர்தல் முடிந்தவுடன் சமுதாயக்கூடம் கட்டி தரப்படும் என்றும் கதிர் ஆனந்த் மக்களிடம் தெரிவித்தார்.  

இதேபோல கதிர் ஆனந்த் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில், வியாபாரிகள் இடையேயும் வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக வெற்றி பெற்றால் தமிழக மக்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று பேசிய அவர், திமுகவுக்கு வழக்கம் போல மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.   

வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்

வேலூர் லாங்கு பஜார், பழைய மீன் மார்க்கெட், சுண்ணாம்புகாரத் தெரு, பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட், பலசரக்கு மார்க்கெட், பழம்  மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு நடந்தே சென்று, அங்குள்ள வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்த கதிர் ஆனந்த், பொதுமக்களையும் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள் பழங்களை கொடுத்தும் பூக்களை கொடுத்தும் அவருக்கு மிகுந்த வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் தனக்கு வாக்களித்தால் விலைவாசியை குறைப்பதாகவும், வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கின்ற பொருட்களின் விலையை குறைப்பதற்கு  நடவடிக்கைகள் எடுப்பதாகவும் கூறி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். வேலூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு இவருக்கு பிரகாசமாக இருக்கும் நிலையில், கொடுத்த வாக்குறுதிகளை இவர் நிறைவேற்றுவாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News