ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி HC வேதாந்தா மனு!!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

Last Updated : Feb 27, 2019, 12:39 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி HC வேதாந்தா மனு!! title=

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்ததா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தருண்அகர்வால் குழு அளித்த அறிக்கை அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிறுத்தி வைத்ததை தொடர்ந்து, வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலிநாரிமன், நவீன் சின்கா அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சந்திக்க வேதாந்தா குழுமத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுளள்து.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும், மின் இணைப்பு, நீர் இணைப்பு வழங்க தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு நாளை அல்லது நாளை மறு தினம் விசரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News