நரேந்திர மோடியின் பிறந்தநாள் பேனர் மீது கொடி கட்டிய விசிக!

பழனியில் அனுமதியின்றி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் வைத்த பேனர் மீது விசிகவினர் கொடி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.   

Written by - RK Spark | Last Updated : Sep 17, 2022, 11:22 AM IST
  • பாஜக பேனர் மீது கொடி கட்டிய வீசிக.
  • மோடி பிறந்தநாள் பேனர் வைத்ததில் சர்ச்சை.
  • போலீசார் சமாதானம் செய்து இருதரப்பினரையும் அனுப்பி வைத்தனர்.
நரேந்திர மோடியின் பிறந்தநாள் பேனர் மீது கொடி கட்டிய விசிக! title=

நாடு முழுவதும் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதேபோல தந்தை பெரியாரின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பழனியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர். பழனி ரயில்வே பீடர் சாலையில் மின்சார வாரியம் அருகே அனுமதியின்றி பாஜக சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியிலேயே பெரியாரின் சிலையும் உள்ளதால் திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது கட்சி கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்களை வைத்தனர். 

மேலும் படிக்க | சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று பாராட்டும் அதிமுகவின் ஜெயக்குமார்

அப்போது‌ பாஜகவினர் வைத்த பேனரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை கட்டினர். இதனால் அங்கு பரபரப்பு  ஏற்பட்டது. இதனை எடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாஜகவினரின் பிளக்ஸ் பேனரியில் கட்டப்பட்ட கொடியை அகற்றுமாறு எச்சரித்தனர். ஆனால் 
கொடியை அகற்ற மறுத்து திக மற்றும் விசிகவினர் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினரே கொடியை அகற்றினர். இது குறித்து தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். 

palani

இதை அடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் பாரதிய ஜனதா கட்சியினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பதாகவும், பாஜக வினரின் பிளக்ஸ் பேனரை வேறு இடத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும் சம்மதித்தனர். தொடர்ந்து பாஜகவினர் அனைவரும் கலந்து சென்றதை அடுத்து, அங்கு நின்றிருந்த திராவிடர் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் போலீசார் கலைத்தனர். இதனால் அங்கு ஏற்பட்டிருந்த பதற்றம் சற்று தணிந்தது.

palani

மேலும் படிக்க | சவுக்கு சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News