உதயநிதி வாரிசா? துணிவா?... கவிப்பேரரசு வைரமுத்து சொன்ன நச் பதில்

நேற்று நடந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட வைரமுத்து உதயநிதி வாரிசா, துணிவா என்பது குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 18, 2022, 01:18 PM IST
  • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது
  • இதனைய்யொட்டி அண்ணா அறிவாலயத்தில் கவியரங்கம் நடந்தது
  • வைரமுத்து தலைமை தாங்கினார்
உதயநிதி வாரிசா? துணிவா?... கவிப்பேரரசு வைரமுத்து சொன்ன நச் பதில் title=

திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகனின் நூற்றாண்டு விழாவை அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். அந்தவகையில் சென்னையில் இருக்கும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா சிறப்பு கவியரங்கம் நடந்தது.  இனமானம் காத்த தமிழ் வானம் எனும் தலைப்பில் இந்தக் கவியரங்கத்திற்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார்.

கவியரங்கத்தில் பாடலாசிரியர்களான விவேகா, கபிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

அப்போது கவிதைகளால் அன்பழகனுக்கு வைரமுத்து புகழாரம் சூட்டினார். அதேபோல் உதயநிதி குறித்து பேசிய வைரமுத்து, அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி வாரிசா இல்லை துணிவா என எல்லோருக்கும் கேள்வி இருக்கிறது. அவர் துணிவு மிக்க வாரிசு என்றார். 

அவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக, அஜித் நடித்திருக்கும் துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தை சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெளியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்; மா.செ கூட்டத்துக்கு ஏற்பாடு - எடப்பாடிக்கு தலைவலி

மேலும் படிக்க | தமிழ்நாடுதான் பெஸ்ட்... கன்னியாகுமரியில் பிவி சிந்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News