இந்தியாவையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. இரண்டாவது அலையின் சீற்றம் மே மாதம் உச்சத்தில் இருந்தது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. ஆனால் தற்போது இந்த பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதற்கிடையில் கொரோனா பரவலை (Corona Spread) கட்டுபடுத்த தமிழகத்தில் தளர்வுகள் கொண்ட ஊரடங்கு (TN Lockdown) அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்கள் தங்களை கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி (Corona Vaccine) செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும் அச்சமும், சந்தேகமும் இருந்த சூழலில், இப்போது மக்களிடம் ஒரு தெளிவு பிறந்துள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ALSO READ | COVID தடுப்பூசி செலுத்திக்கொண்ட அடுத்த நாள் மதுரை இளைஞர் மரணம்: காரணம் குறித்து ஆய்வு!
இந்நிலையில் முதல்கட்டமாக இந்தியா முழுவதும் முன்கள பணியாளர்கள், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் ஜூலை 6 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் இந்த தடுப்பு முகாமில் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் தவறாமல் தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ALSO READ | Covaxin செயல்திறன் அபாரம்! பாரத் பயோடெக்கின் ஆய்வு முடிவு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR