சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா
ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான தீர்மானத்தை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்மொழிந்தார்.
நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் திருமதி வி.கே. சசிகலா.
— V.K. Sasikala (@CMOTamilNadu) February 6, 2017
Thirumathi V. K. Sasikala to be sworn in tomorrow as the Chief Minister of TamilNadu.
— V.K. Sasikala (@CMOTamilNadu) February 6, 2017
ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில், தற்போது சசிகலா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை முதலமைச்சராக பதவியேற்கிறேன் என அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என சட்டப் பஞ்சாயத்துக்கு இயக்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சசிகலா நாளை முதலமைச்சராக பதவியேற்கிறேன் என கூறியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரபப்பு ஏற்பட்டுள்ளது.