திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர். இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு மணம் செய்தார். இதனால் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் சபந்தபட்ட பதினோர் நபர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. இதில், மூன்று நபர்களை விடுதலை செய்தது.
இதையடுத்து, தற்போது இந்த குற்றத்தில் சம்பந்தபட்ட எட்டு முக்கிய குற்றவாளிகளில் 6 நபர்களுக்கு பிரிவு 302-ன் கீழ் தூக்கு தண்டனையும், 1 குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை என்றும், மற்றொரு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது.
குற்றவாளிகளின் தண்டனை விவரம்:
1. சின்னசாமி - மரண தண்டனை
2. பி.ஜெகதீசன் -மரண தண்டனை
3.எம். மணிகண்டன் - மரண தண்டனை
4.எம்.மைக்கேல் (எ) மதன் -மரண தண்டனை
5.பி.செல்வக்குமார் - மரண தண்டனை
6.ஸ்டீவன் தன்ராஜ் - இரட்டை ஆயுள் தண்டனை
7.தமிழ்(எ) தமிழ் கலைவாணன் - மரண தண்டனை
8. மணிகண்டன்.மா (அடைக்கலம் கொடுத்தவர்) - ஐந்து ஆண்டுகள் சிறை