கடந்த பத்து நாட்களாக திமுக தலைவர் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27 ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
இதையடுத்து, காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மலேசியா சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர், தமிழ் திரையுலக நடிகர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் என பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர்.
இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவிரி மருத்துவமனைக்கு இன்று (ஆகஸ்ட் 6 ஆம் தேதி) மத்திய அமைச்சர் நிதின்கட்கரி காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனும் உடன் வந்துள்ளார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்து வருகின்றனர்.
இன்று காவேரி மருத்துவமனை திமுக தலைவர் கருணாநிதியின் உடல் உறுப்புகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பு தான் எந்த முடிவையும் சொல்ல முடியும் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ள நிலையில், மத்திய அமைச்சர் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.