ரூ.10000 அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! ஆத்திரத்தில் தீக்குளித்த வாலிபர்!

டிராஃபிக் போலீஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்ததை தாங்க முடியாத இளைஞர் ஒருவர், அந்த இடத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 13, 2022, 03:05 PM IST
  • குடித்துவிட்டு வந்ததாகக் கூறி வாகனம் பறிமுதல்
  • ரூ.10000 அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்
  • மன உளைச்சலில் டிரைவர் அங்கேயே தீக்குளிப்பு
ரூ.10000 அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! ஆத்திரத்தில் தீக்குளித்த வாலிபர்! title=

சேலம் சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி ரவுண்டானாவில் போக்குவரத்துக் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இரவு 9.30 மணியளவில் சரக்கு வாகனம் ஒன்று அந்த வழியாக வந்துள்ளது. வழக்கம்போல அந்த வாகனத்தை மடக்கி போலீஸார் சோதனை செய்த போது, டிரைவர் சந்தோஷ் என்பவர் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரூ.10,000 அபராதம் கட்ட வேண்டும் என்றுகூறி சரக்கு வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தோஷ், ஆத்திரத்தில் அங்குமிங்கும் சாலையில் நடந்தபடியே இருந்தார்.

மேலும் படிக்க | மனைவியின் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!

ஒருகட்டத்தில், எங்கிருந்தோ பெட்ரோலை வாங்கிவந்த சந்தோஷ் திடீரென தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளித்துக்கொண்டார். உடலில் கொழுந்துவிட்டு எரியும் தீயோடு சந்தோஷ் அலறியதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் துணிமூலம் நெருப்பை அணைத்து சந்தோஷை மீட்டனர். உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சந்தோஷுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடலில் கடும் தீக்காயங்களுடன் சந்தோஷ் சிகிச்சைப் பெற்று வருகிறார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த கொண்டாலம்பட்டி போலீஸார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். போக்குவரத்து காவலர்களிடமும் நடந்தவற்றைக் கேட்டறிந்தனர். இந்நிலையில், சந்தோஷ் தீக்குளித்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவைக் கொண்டு கொண்டாலம்பட்டி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | நடுரோட்டில் பேருந்து மீது ஏறி தியானம் செய்த இளைஞர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News