தோடரின மக்களின் பாரம்பரிய கலை மீட்டெடுக்க படும் -பாண்டியன்!

நீலகிரி மாவட்டத்தின் பூர்வீகக் குடிகளுள் ஒன்றான தோடரின மக்களின் பாரம்பரிய கலை, மொழிகளை மீட்டெடுக்கும் பணிக்கு யுனெஸ்கோ உதவியை நாடியிருப்பதாக அமைச்சர் மாபோ பாண்டியன் தெரிவித்துள்ளார்!

Last Updated : Jul 14, 2019, 05:41 PM IST
தோடரின மக்களின் பாரம்பரிய கலை மீட்டெடுக்க படும் -பாண்டியன்! title=

நீலகிரி மாவட்டத்தின் பூர்வீகக் குடிகளுள் ஒன்றான தோடரின மக்களின் பாரம்பரிய கலை, மொழிகளை மீட்டெடுக்கும் பணிக்கு யுனெஸ்கோ உதவியை நாடியிருப்பதாக அமைச்சர் மாபோ பாண்டியன் தெரிவித்துள்ளார்!

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், பணியர், காட்டுநாயக்கர் ஆகிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடியினத்தவரும் தங்களுக்கே உரித்தான பாரம்பரிய பழக்கவழக்கங்களையும், உணவு முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.

இவர்களில் தோடர் இனத்தை சேர்ந்த பெண்கள் எம்பிராய்டரி எனப்படும் கலையில் பிரசித்தி பெற்றவர்களாவர். தோடரின பெண்களின் இந்தக் கலைக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னரே புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. 

காட்டன் துணியில் கறுப்பு மற்றும் சிவப்பு நூல்களைக் கொண்டு மலைகள், ஆறுகள், அத்திப்பூ, வண்ணத்துப்பூச்சி, மயில், எருமை போன்ற உருவங்களை வடிவமைக்கின்றனர். வேலைப்பாடுகள் நிறைந்த இந்த ஆடையை தோடர்கள் புனிதமாகக் கருதுவதோடு மட்டுமல்லாமல் தோடரினத்தில் பிறந்த பெண்கள் அனைவரும் இந்தக் கலையை அறிய வேண்டும் எனவும் வலியுறுத்தி, இக்கலையை அழியாமல் பாதுகாத்தும் வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் உள்நாட்டு முக்கிய விருந்தினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முதல் வெளிநாட்டு விருந்தினர்கள் வரை அனைவருக்கும் இப்பொருட்கள் பரிசாக அளிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தோடர்களின் இந்த கலைக்கு உரிய அங்கிகாரம் பெற்று தர வேண்டும் என தோடரின மக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தோடரின மக்களின் கலைகளை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மாபோ பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தோடர், ஆகிய மொழிகளை மீட்டெடுக்கும் பணிக்கு யுனெஸ்கோ உதவியை நாடியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். திராவிட மொழி கூட்டு எனப்படும் 40 மொழிகள் எழுத்து வடிவங்கள் இல்லாமல் உள்ளன என குறிப்பிட்டு பேசிய அவர், உதகையில் பழங்குடியின பண்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News