சென்னை திரைப்பட விழாவில் இன்று திரையிடப்படும் படங்கள்!!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இன்று திரையிடப்படும் திரைப்படங்களின் தொகுப்புகளை காண்போம். 

Last Updated : Dec 15, 2017, 11:48 AM IST
சென்னை திரைப்பட விழாவில் இன்று திரையிடப்படும் படங்கள்!! title=

சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று ’தி ஸ்கொயர்’ எனும் ஸ்வீடன் திரைப்படத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் 84 உலக சினிமாக்கள், 11 இந்திய பனோரமா, 12 தமிழ் சினிமா உள்பட 100-க்கும் மேற்பட்ட சினிமாக்கள் திரையிடுகின்றனர். 

இன்று திரையிடப்படும் சில முக்கியத் திரைப்படங்களின் தொகுப்புகள் பற்றி காண்போம். 

பகுதி-1

 இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தேவிபாலா தியேட்டரில் திரையிடப்படுகிறது ஜப்பானிய படமான ‘ரேடியன்ஸ்’. திரைப்பட வசனகர்த்தாவான மிசேகோவிற்கும், பார்வை குறைபாடு கொண்ட புகைப்பட கலைஞர் மற்றும் நகமோரியைக்கும் இடையிலான உறவின் மென்மையான பக்கங்களே இந்த திரைப்படம். நவோமி கவசே ‘ரேடியன்ஸ்’ படத்தை இயக்கியுள்ளார்.

பகுதி-2

சென்னைத் திரைப்பட விழாவில் கொரிய, பிரெஞ்சுத் திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் அதிகம். இந்தவகையில், இன்று திரையிடப்படும் கொரிய மொழித் திரைப்படம் ‘The Day after’. பதிப்பகம் ஒன்றை நடத்திவரும் போங்வான் மீது, அவர் மனைவிக்கு எழும் சந்தேகத்தில் நகர்கிறது இப்படம். ஒரு காதல் கவிதையை பின்னணியாகக் கொண்ட ‘The day after’ இன்று மாலை அண்ணாசாலையில் உள்ள தேவி திரையரங்கில் 4.30 மணிக்கு திரையிடப்படுகிறது.

பகுதி-3

ஆண்களின் ஓரின ஈர்ப்பை மிக இயல்பாக பதிவு செய்துள்ள தமிழ் திரைப்படம், ‘my son is gay’. லோகேஷ், இயக்கி நடித்திருக்கும் இப்படம், பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும் என அவரே சொல்கிறார். ரஷ்ய கலாச்சார மையத்தில் 3.00 மணிக்கு இப்படத்தைக் காணலாம். 

இந்தப் படங்களோடு, இன்று The dress maker, wrath, துப்பறிவாளன் உட்பட 26 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.

Trending News