அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி, 13-வது ஊதிய ஒப்பந்தம், 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முடிந்தது. அடுத்து, 14-வது ஊதிய ஒப்பந்தம் போட்டிருந்தால், கடந்த மாதம் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், கொரோனா தொற்று பாதிப்பு, சட்டசபை தேர்தல், அமைச்சர் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், ஒப்பந்தப்பேச்சு முழுவீச்சில் நடைபெறவில்லை.
இதைக் கண்டித்து, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் அனுப்பியதோடு, ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் நாளை வேலைநிறுத்தம் செய்வதாக சிஐடியூ தெரிவித்திருந்தது.
மேலும் படிக்க | திமுக ஆட்சியில் தினம் புதுப்புது ஊழல் - அண்ணாமலை காட்டம்
இந்நிலையில் நாளை அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களும் பணியில் இருக்க வேண்டும் என்றும், பணிக்கு வரவில்லை எனில் விடுப்பாகக் கருதி ஊதியம் பிடிக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ