ஜூன் மாதம் நடைபெறும் குரூப் 4 தேர்வு ரிசலட் எப்போது வெளியிடப்படும்?

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கு ஜூன் 9ல் குரூப் 4 தேர்வு நடைபெறும். பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 31, 2024, 09:01 AM IST
  • குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியானது
  • பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
  • பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு
ஜூன் மாதம் நடைபெறும் குரூப் 4 தேர்வு ரிசலட் எப்போது வெளியிடப்படும்?  title=

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இத்தேர்வுக்கு பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு துறைகளில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதற்காக டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும். 

தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய ஓராண்டு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 2024க்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணை கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. அப்போது 2024ல் குரூப் 4 பதவிக்கான தேர்வு தேதி ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. அதன்படி குரூப் 4 தேர்வுக்கான தேர்வு நடத்துவதற்கான தேதியை நேற்று காலை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக வெளியிட்டது.

அதில் குரூப் 4 பதவியில் 6,244 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விஏஓ(கிராம நிர்வாக அலுவலர்) 108 இடங்கள், பல்வேறு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர் 2,604, என 32 பதவியில் 6,244 பணி இடங்கள் நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மார்ச் 4ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மார்ச் 6ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | குரூப்-4 தேர்வுத் தேதி அறிவிப்பு

 தொடர்ந்து ஜூன் 9ம் தேதி எழுத்து தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். பகுதி ”அ”வில் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 வினாக்களும், பகுதி ”ஆ” வில் பொது அறிவில் 75 வினாக்களும், திறனறிவு மனக்கணக்கில் 25 வினாக்கள் என 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பகுதி அவில் குறைந்தபட்சம் 40 சதவீதம்(60 மதிப்பெண்கள்) பெற வேண்டும். இந்த மதிப்பெண் பெற்றால் மட்டுமே விடைத்தாளின் பகுதி ”ஆ” மதிப்பீடு செய்யப்படும். 

கட்டண சலுகை உண்டு

இந்த தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பகுதி அ, ஆ ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும். சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் இந்த தேர்வானது நடைபெறும். தேர்வறைக்குள் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. இதேபோல் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு கட்டணத்தில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இரு மாவட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். 

10ஆம் வகுப்பு கல்வி தகுதி

தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றில் உள்ள பல தேர்வு மையங்களில் ஒன்றில் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். குரூப் 4 தேர்வு முடிவுகள் தோராயமாக அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2020, 2021ல் டிஎன்பிஎஸ்சி சார்பில் அரசு தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. கடந்த 2022ல் குரூப் பதவியில் 10,117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு எழுத 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் சாதனையாக கருதப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதி. மேலும் ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அரசு பணியில் நேரடியாக சேர்ந்து விடலாம். 

குரூப் 4 ரிசல்ட் 2025

இதனால், அரசு பணியில் சேர விரும்புவோர் போட்டி போட்டு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. எனவே குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு விரிவான ஏற்பாடுகளை டிஎன்பிஎஸ்சி செய்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் தோராயமாக அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வனபாதுகாவலர் காவலர் பணிக்கு தேர்வு

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள குரூப் 4 பணியிடங்களில் புதிதாக வன பாதுகாவலர், வனக் காவலர் பணியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள் இதுவரை வன சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் நிரப்பப்பட்டு வந்தது. தற்போது டிஎன்பிஎஸ்சி அந்த பணியிடங்களை நிரப்ப உள்ளது. அந்த வகையில் வன பாதுகாவலர், காவலர் என 1,177 இடங்களை எழுத்து தேர்வு மூலம் டிஎன்பிஎஸ்சி நிரப்புவது இதுவே முதன்முறையாகும். 

மேலும் படிக்க | மோடி வெற்றி பெற்றால் அதிபர் ஆட்சி முறைக்கு இந்தியா மாறும் - ஆ.ராசா எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News