தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கில் செப்டம்பர் 1 முதல் சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. அதன் படி, 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான யோசனை உள்ளது.
அது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். கொரோனா காரணமாக பாடத்திட்டங்களை குறைப்பதற்கான வேலை நடைபெற்று வருகிறது என்று பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலுக்கு நேற்று சென்ற அவர் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் கலந்தாலோசித்து தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் ஒரிரு தினங்களில் முடிவு செய்யப்பட்டு வெளியிடப்படும்.” என்று கூறினார்.
ALSO READ: தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி: அரசு எடுத்துள்ள நல்ல முடிவு
"தனியார் பள்ளிகள் (Private Schools) 85% சதவீதம் கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதுவும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் 75% சதவீதம் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். பொருளாதார பிரச்சினை காரணமாக அதையும் செலுத்த முடியாதவர்களுக்கு முழுமையான விலக்கு அளிக்க பரீசிலிக்கலாம்” என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையெல்லாம் மீறி அதிக கட்டணங்கள் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
முன்னதாக, ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று, தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை பள்ளிகள் திறக்கலாம் என தெரிவித்திருந்தார்.
ALSO READ: ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR