விநாயகர் சதுர்த்தி கொண்டாட இத்தனை நிபந்தனைகளா? காவல் துறையின் பாதுகாப்பு வழிமுறைகள்!

TN Guidelines for Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி, தமிழகத்தில் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 17, 2023, 10:27 AM IST
  • தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.
  • அசம்பாவிதங்களை தவிர்க்க தமிழக காவல் துறை நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
  • விநாயகர் சதுர்த்தி கொண்டாட மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகள்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட இத்தனை நிபந்தனைகளா? காவல் துறையின் பாதுகாப்பு வழிமுறைகள்! title=

தமிழகத்தில் அனைவராலும் கோலாகலமக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று, விநாயகர் சதுர்த்தி. ஊர்வலங்கள், கோயில்களில் பக்தர் கூட்டம் என பொது வெளிகளில் நாளை கூட்ட நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். இதனால் ஆங்காங்கே பல அசம்பாவிதங்களும் ஏற்படும். இவற்றை தவிர்க்க, தமிழக அரசு வருடா வருடம் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிடுவதுண்டு. அந்த வகையில், இந்த வருடமும் சில வழிமுறைகள் வெளியாகியுள்ளது. 

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

தமிழக காவல் துறை சார்பில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா அசம்பாவிதங்களின்றி நடைபெற பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளை ஊர்வலம் எடுத்து செல்லும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. இவையனைத்தையும் கண்காணிக்கும் வகையில் விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ள்து. ட்ரோன்கள், மொபை சிசிடிவி கேமராக்கள் என பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தமிழக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | வேலூர்: முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரோன்கள்-பலூன்கள் பறக்க தடை!

கட்டுப்பாடுகள் என்னென்ன..?

>நிறுவப்பட இருக்கின்றகரையக்கூடிய  இயற்கையான களிமண்ணால் மட்டும் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

>கற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்ட்ர் ஆப் பாரிஸ் மற்றும் தடை செய்யப்பட்ட வேதிபொருட்கள் அடங்கிய வர்ண பூசுதலை பயன்படுத்தக்கூடாது.

>சிலையின் உயரம் பிடம் உட்பட 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

>சிலைகளானது வேற்று மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவணங்கள் அருகில் நிறுவப்பட கூடாது. விழா அமைப்பாளர்கள் எளிதில் தீப்பற்றகூடிய பொருட்களை கொண்டு 4

>பந்தல் அமைப்பதை தவிர்த்திடல் வேண்டும். விழா அமைப்பினைச் சேர்ந்த இருவர் 24X7 சிலைப்பாதுகாப்பில் ஈடுபட வேண்டும்.

>சிலைக் கரைப்பு ஊர்வலமானது அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாகவும் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மூலமாக மட்டுமே எடுத்துச்செல்லப்பட வேண்டும். 

>விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் ஊர்வல வழித்தடங்கள் மற்றும் சிலைக் கரைப்பு இடங்களில் பாட்டசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். 

>விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது மத துவேச
கோஷங்களை எக்காரணத்தை முன்னிட்டும் எழுப்பக் கூடாது. 

> ஒலிப்பெருக்கிகள் காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது.

>விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது பொது மக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமலும் சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படாமலும் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற அமைப்பாளர்களும் பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுகொள்ளப்படுவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | “மாணவர்கள் கல்வியை கற்றால் மட்டும் உயர முடியாது..” உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News