Chennai: தமிழக பாஜக சார்பில் நவம்பர் 6 முதல் வேல் யாத்திரை (Vel Yatra) பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருந்த நிலையில், கோவிட் -19 தொற்று அச்சம் காரணமாகவும், பொதுக் கூட்டங்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு (TN Govt) தெரிவித்தது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு, பாஜகவை தவிர மற்ற பல அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். தற்போது அதிமுக (AIADMK) கூட்டணியில் பாஜக (BJP) உள்ளது. அதிமுக அரசின் இந்த முடிவை அடுத்து கூட்டணியில் ஏதாவது பிரச்சனை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் முடிவுக்கு பல பாஜக ஆதரவாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதனையடுத்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார் (Minister Jayakumar), "பொதுமக்களின் நலன் கருதி வேல் யாத்திரையை கைவிடுவதே நல்லது. இதுக்குறித்து பா.ஜ.க. முடிவெடுக்க வேண்டும். யாராக இருப்பினும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதாவது "பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்போவதில்லை என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி" என விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அதேபோல விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan), தனது ட்விட்டர் பக்கத்தில், "வேல் யாத்திரைக்கு அனுமதி தர இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். கொரோனா இரண்டாவது அலை பரவும் நிலையில் அனுமதிக்க இயலாது என்னும் அரசின் நிலைப்பாட்டினை வரவேற்கிறோம். நீதிமன்றமும் அதன்படி தீர்ப்பளிக்குமென நம்புகிறோம். முதல்வருக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள்" எனக் கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த நினைத்த பாஜக முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுத்தது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தனிப்பட்ட வேண்டுகோளை விடுத்த பிறகும், முதல்வர் பழனிசாமி (Edappadi Palaniswami) தனது கூட்டணி கட்சியின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR