சென்னை, தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு, குறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சர்வே எண் அடிப்படையில் நிலத்தின் மதிப்பு மாறுபடும். எனவே, கையகப்படுத்தும். நிலத்திற்கான சந்தை விலையைவிட 3 அரை மடங்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படும்.
உதாரணத்திற்கு 100 ரூபாய் மதிப்பு என்றால் மூன்றரை மடங்கு விலை கூடுதலாக 350 ரூபாய் வழங்கப்படும். 13 கிராமத்தில், 1005 வீடுகள் அப்புறப்படுத்த உள்ளோம். கையகப்படுத்தும் நிலத்திற்கு பணமும், வீடு கட்டுவதற்கு நிலமும், பணமும் வழங்க உள்ளோம். விமானநிலையம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகாமையில் விரும்பக்கூடிய இடத்தில் வசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
அப்பகுதியில் வசிப்பவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும். விவசாயிகள் எந்தவிதத்திலும் பாதிக்ககூடாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். ஆனால், இதுபோன்ற பொது நோக்கத்திற்கான திட்டங்கள் வரும்போது விவசாய நிலத்தை எடுப்பதை தவிர வேற வழி இல்லை. பெங்களூர், ஹைதராபாத் வளர்ச்சி நம்மை விட கூடுதலாக உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது நமக்கு புதிய விமான நிலையம் அவசியமாக உள்ளது.
பன்னூர், பரந்தூர் ஆகிய இடங்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது, பரந்தூரில் குறைந்த வீடுகள் தான் உள்ளது. அதனால் தான் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்படும் மக்களும் குறைவு. தமிழகத்தின் பொருளாதாரம், அந்நிய செலாவணி ஈட்டுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளார். புதிதாக அமைக்கபட உள்ள விமான நிலையத்தில் நீர் நிலைகள் பாதிக்காத வகையில், சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு போல் ஓடுதளம் அமைக்கப்படும்.
கையகப்படுத்தும் நிலத்திற்கு பணமும் கொடுத்து, நிலத்திற்கு பதிலாக விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு அவர்கள் விரும்புகின்ற இடங்களிலேயே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடு கட்டுவதற்கான பணத்தையும் அரசாங்கமே வழங்கும். 8 வழிச்சாலை பணிகளின் போது, விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று தான் சொன்னோம்" எனத் தெரிவித்தார். அப்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் படிக்க | அரசு விழாக்கள் பொழுதுபோக்கு அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
மேலும் படிக்க | வானிலை எச்சரிக்கை: தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் கனமழை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ