உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
உள்ளாட்சி தேர்தலுக்கு 9.12.2019 அன்று முதல் 16.12.2019 வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். 17.12.2019 அன்று வேட்பு மனு மீது ஆய்வு நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19.12.2019 அன்று கடைசி நாளாகும். இருகட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 2.1.2020 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
மேலும், மாவட்ட, ஒன்றிய குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் 11-01-2020-ல் நடைபெறும். ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் 11-01-2020-ல் நடைபெறும். கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் இல்லை.
---ஊரக உள்ளாட்சித் தேர்தல் முக்கிய தேதிகள்---
* வேட்பு மனு தாக்கல் - 09.12.2019 * வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - 16.12.2019 * வேட்பு மனுக்கள் பரிசீலனை - 17.12.2019 * வேட்பு மனுக்கள் வாபஸ் கடைசி நாள் - 19.12.2019 * முதல்கட்ட தேர்தல் - 27.12.2019 * இரண்டாம் கட்ட தேர்தல் - 30.12.2019 * வாக்கு எண்ணிக்கை - 02.01.2020 |
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்திய, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு பகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.