தமிழகத்தில் ஒரு விவசாயிகூட வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் தற்கொலைக்கு வழங்கப்படும் இழப்பீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தனியார் நிறுவனம் ஒன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவது மட்டும் தீர்வாகாது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு சார்பில் இன்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில்:-
தமிழகத்தில் 82 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் யாரும் வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர்களில் பல்வேறு குடும்பப் பிரச்னைகளால்தான் இறந்தனர்.
தமிழக அரசு சார்பில் அந்த 82 விவசாயிகளுக்கும் ஏற்கெனவே ரூ.2.46 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்துகொண்டு இறக்கவில்லை.
என்று கூறியுள்ளது.