விரைவில்!! தமிழக அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் லைசென்ஸ் -வெங்கய்யா நாயுடு

Last Updated : Feb 28, 2017, 02:14 PM IST
விரைவில்!! தமிழக அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் லைசென்ஸ் -வெங்கய்யா நாயுடு title=

3 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் நிதின்கத்காரி, வெங்கய்யா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். 

அப்பொழுது தமிழக முதல்வரிடம் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி முதலில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார். அப்போது தமிழக நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு கூறியதாவது:-

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் மேலும் பல வீடுகள் ஒதுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாக கூறினார். மேலும் நகர மேம்பாடு திட்டமான அம்ருத்தில் நாமக்கல் உட்பட 4 நகரத்தை சேர்ப்பது பற்றி பரிசீலனை செய்ததாக தெரிவித்தார். 

தமிழக அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் லைசென்ஸ் அனுமதி கொடுப்பது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் வெங்கய்யா நாயுடு கூறினார்.

 

Trending News