தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் இந்த நாட்களில் மதுக்கடைகள் திறக்கப்படாது!!

இந்த லாக்டௌனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 1, 2020, 10:11 AM IST
  • கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.
  • தமிழகத்தில் 7 ஆம் கட்டமாக ஆகஸ்ட்1 முதல் 31 வரை தளர்வுகளோடு லாக்டௌன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் இந்த நாட்களில் மதுக்கடைகள் திறக்கப்படாது!!  title=

கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. பல நாடுகள் இதை சமாளித்து இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவும் அன்லாக் செயல்முறை மூலம் பல வித நடவடிக்கைகளை மீண்டும் துவக்கியுள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu) 7 ஆம் கட்டமாக ஆகஸ்ட்1 முதல் 31 வரை தளர்வுகளோடு லாக்டௌன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்டில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், அதாவது 2, 9, 16, 23, 30 ஆகிய ஐந்து நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள கடைகளை அடைக்க டாஸ்மாக் TASMAC) மேலாளர்களுக்கு அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த லாக்டௌனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். மேலும் சென்னையில் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ: தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.....துக்கத்தில் மக்கள்

 உணவகங்களைப் பொறுத்த வரை, காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே உணவருந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டௌனில் முந்தைய ஊரடங்குகளை விட அதிகத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் மக்கள் மிகவும் தேவையாக இருந்தால் மட்டுமே வெளியே செல்லும் படி கேடுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

Trending News